பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/443

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

HeSlgië Gaëla dit 431

முகத்தே' என்னும் வாக்கு (12) மிக்க நயமுடையது. இவன் யாகம் செய்தது பற்றியும் இவர் குறிப்பிடுகின்றார். இதனால், இவ் வழக்கம் பழங்காலத்திலேயே இங்கு புகுந்து விட்டதென்பது விளங்கும். இவருடைய செய்யுட்கள் திட்ப நுட்பம் செறிந்தவை யாகும. -

நெடுங்கழுத்துப் பரணர் 291

பரணர் என்னும் பெயரோடு விளங்கிய இவருக்குத் தந்துள்ள அடைமொழி, இவர் வேறொரு பரணர் என்பதனைக் காட்டும். உறுப்பின் அமைதியால் வந்தது இது. போரிடச் செல்வோர் 'துவெள்ளறுவை உடுத்துச் செல்வர்' என்பதனை இச் செய்யுளால் அறியலாம். நெடுங் கழுத்து என்பது சினையால் அமைந்த பெயரும் ஆகலாம்.

நெடும் பல்லியத்தனார் 64

இவர் பலவகை இசைக் கருவிகளையும் இயக்கத் தெரிந்தாராதலின் இப் பெயர் பெற்றனர் போலும். பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை இவர் பாடியுள்ளனர். அக் காலத்தவர் எனலாம். இச் செய்யுள் விறலியாற்றுப் படைத் துறையைச் சார்ந்தது. நெடும்பல்லியத்தை எனக் குறுந்தொகை 178, 203 செய்யுட்களைச் செய்தார் பெயர் குறிக்கப் படுகின்றது. அவர் இவரினும் வேறாகலாம்.

நொச்சி நியமங்கிழார் 293

நொச்சி நியமம் என்னும் ஊரைச் சார்ந்த வேளாண் குடியினர் இவர். அகநானூற்று 52ஆம் செய்யுளும், நற்றிணையின் 17, 208, 209 ஆம் செய்யுட்களும் இவர் பெயரான் வழங்கும். இவருடைய அகப் பாட்டுக்கள் இனிதான பொருட்செறிவு கொண்டன. வேங்கைப் பூவைப் பறிக்க விரும்பிய குறமகள், அது ஏலாமையின், வேங்கை வேங்கை எனக் கூச்சலிட, அது கேட்ட ஊரவர் கையிற் சிலையோடு அவ்விடம் நோக்கிப் புலிவந்தது போலும் எனக் கருதிப் போவாராயினர் (அகம் 52) எனக் குறிஞ்சித் தினையில் சுவையான காட்சியை இவர் காட்டுகின்றனர். ‘இன்னுயிர் கழிவதாயினும், நின் மகள் ஆய்மலர் உண்கண் பசலை, காமநோயெனச் செப்பாதீமே எனத் தலைமகள் சொல்வதாகக் கூறுவது, அவரது குடிமரபு காக்கும் செவ்வியைக் காட்டுவதாகும். 'உயிரினும் சிறந்தது நாணம் என நாணின் சிறப்பையும் உரைப்பர். பூக்கோள் காஞ்சியாக விளங்கும் இச் செய்யுள், பூக்கோட் பறையொலி எழுவதன் முன்பாகவே, மறக்குடியினர் போர்க் கெழுந்து சென்றுவிடும் மறமாண்பினர் என்பதனையும் காட்டுவதாகும்.