பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/444

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

432

புறநானூறு - மூலமும் உரையும்


432 up5πgφπρι - "ρουφώ α-σοπιμό

. பக்குடுக்கை நன்கணியார் 194

நன்கணியார் என்பது இவரது கணிதத்துறை ஆற்றலால் அமைந்த பெயர். 'பக்குடுக்கை' என்பதற்கு மெய்ப்பையே உடையாகக் கொண்டதுறவிக் கோலத்தினர் என்பர். இச் செய்யுள் உலகத்து வாழ்க்கை நிலையாமையைப் பற்றி மிகவும் திட்பமுடன் எடுத்துக் கூறுகின்றது. படைத்தோனைப் பண்பிலாளான்” எனக் கூறுவதும் கருதுக.

பரணர் 4, 63, 141, 142, 144, 336, 341, 343, 348, 352, 354, 369

இச் செய்யுட்களுடன், அகநானூற்றுள் 34 செய்யுட்களும், குறுந்தொகையுள் 16 செய்யுட்களும், நற்றிணையுள் 12 செய்யுட்களும், பதிற்றுப்பத்துள் சேரன் செங்குட்டுவனைப் பற்றிய ஐந்தாம் பத்தும் பாடியவர் இவராவர். இவர் பாணர் மரபினர். கபிலர் காலத்தவர். இவராற் பாடப் பெற்றோர் பலர். சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி, சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன், சோழன் வேற்பஃறடக்கைப் பெருநற்கிள்ளி, வையாவிக் கோப்பெரும் பேகன், சேரமான் கடலோட்டிய வெல்கெழு குட்டுவன் ஆகியோர் சிறப்பானவர்கள். பரணதேவ நாயனார், நெடுங் கழுத்துப் பரணர் என்போர் இவரினும் வேறானவர் ஆவர். இவர் வரலாறு விரிவானது. இவருடைய செய்யுட்களுள் அக் கால வரலாற்றுச் செய்திகள் பலவற்றைக் காணலாம். காவிரி செங்குணக்காக ஒழுகும்’ என்பார் இவர். செழியனது கூடல் பொய்யா விழவினை உடையது எனவும் கூறுவர். இரவுக் குறிக்கு இடையூறுகளான வருவனபற்றி இவர் அமைத்துள்ள செய்யுள் (அகம் 122) மிக்க சுவை உடையது ஆகும். கரிகால் வளவனை வானகப் பறந்தலையில் ஒன்பது குடையும் நன்பகல் ஒழித்த போர் மறமேம்பாட்டை இவ்ர் வாக்கால் அறியலாம். (அகம்.125). இவரைப் பற்றிய செய்திகளுட் பலவற்றை அகநானூறு தெளிவுரை, குறுந்தொகை தெளிவுரை ஆகிய நூற்களின் பின்னிணைப்புக்களுட் காண்க. கடற்பிறக் கோட்டிய செங்குட்டுவனைப் பாடிய பத்துச் செய்யுட்களுக்கும் பரிசிலாக, உம்பற்காட்டு வாரியையும், அவன் மகன் குட்டுவன் சேரலையும் பெற்றுப் புகழ்பெற்றவர் இவர். பேகனின் கொடைமடத்தை வியந்து, 'உடாஅ போரா ஆகுதல் அறிந்தும், படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எங்கோ’ என்பர் இவர் (புறம்.141). அவனை அவன் மனைவியோடு ஒன்றுபடுத்தப் பெருமுயற்சி எடுத்துக்கொண்டவர் இவர். 'பசித்தும் வாரேம்; பாரமும் இலமே எனத் தம் நிலையைக் கூறுவதனால் (145) இவர் ஒரளவு செழுமையான வாழ்க்கையினர் எனலாம். மகட்பாற் காஞ்சித் துறையாக இவர் பாடிய செய்யுட்கள் (336,341, 343, 348, 352, 354)