பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/453

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

441


மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் 329

அகநானூற்றுள் ஆறும், குறுந்தொகையுள் ஒன்றும், நற்றிணையுள் நான்கும் இவர் பாடிய பிற செய்யுட்கள். இவர் அறுவை வாணிகம் செய்து வந்தவர். இவருடைய அகப்பாட்டுக்கள் செறிவான இலக்கிய நயம் வாய்ந்தவை ஆகும். 'உரைசால் நெடுந்தகை ஒம்பும் ஊர் என்று, அதன் சிறந்த காவன் மேம்பாட்டையும் இவர் மிகவும் தெளிவாக எடுத்துக் கூறுவர்.

மதுரை இளங்கண்ணிக் கெளசிகனார் 309

“கெளசிகன்’ என்னும் பெயரினர் இவர்; மதுரையில் வாழ்ந்தவர்; இளங்கண்ணி என்பது மதுரையின் ஒரு பகுதியாக இருக்கலாம்; அன்றி, முதுகண் என்பதுபோல ஒரு பதவியாகவும் இருக்கலாம் என்பர். பகைவரைத் தன் தோற்ற மாத்திரத்தானே அஞ்சச் செய்து வென்றி கொள்ளும் பேரொளி கொண்ட ஒரு மாமறவனை இச் செய்யுளில் இவர் நமக்கு அறிமுகப்படுத்து கின்றனர். அவன் பாசறைக் கண் உள்ளான் என்று அறிந்ததுமே, பகைவர் அஞ்சிக் கலங்கி ஓடத் தொடங்குவர் என்கின்றனர். மதுரை ஒலைக்கடைக் கண்ணம்புகுந்தார் ஆயத்தனார் 350

இவர் மதுரைக்கண் ஒலைக்கடை என்னும் பகுதியில் இருந்தவர் ஆகலாம். 'கண்ணம் புகுந்தார் ஆயத்தனார் என்னும் சொற்கள், மகளிர் ஆயத்துள் பலராலும் கண்டு காதலித்துப் போற்றுமளவு எழிலும் ஆற்றலும் கொண்டிருந்தவர் எனக் காட்டும் காரணப் பெயர். ஒரு தலைவனின் மகளை வேட்டு வந்தோர். தந்தை மறுப்பினும், போரிட்டாவது அவளை அடையா மற் போகமாட்டார் என்று கூறுகின்றார் இச் செய்யுளில். மகளிரது கடைசி வந்த கண்களுக்கு வடிவேல் எஃகிற் சிவந்த உண்கண்' என்று உவமித்துக் கூறும் நயத்தைக் காண்க.

மதுரைக் கணக்காயனார் 330

மதுரைக்கண் ஆசிரியத் தொழிலோராக இருந்தவர் இவர். நக்கீரனாரின் தந்தையார். மாற்றாரது மண்டிவரும் பெரும்படை யினைத் தானே தமியனாக நின்று தடுத்து நிறுத்திப், 'பெருங்கடற்கு ஆழி அணையனாக விளங்கிய ஒரு மாவீரனை இச் செய்யுளால் நமக்குக் காட்டுகின்றார் இவர். அகநானூற்றுள் மூன்றும், நற்றிணையுள் ஒன்றும் இவர் செய்த பிற செய்யுட்கள். 'மறப்போர்ப் பாண்டியர் அறத்திற் காக்கும் கொற்கையம் பெருந்துறை முத்தின் அன்ன, நகைப் பொலிந்து இலங்கும் எயிறு: "வேந்தமர்க் கடந்த வென்றி நல்வேல், குருதியொடுதுயல் வந்தன்ன, நின் அரிவேய் உண்கண் (அகம் 27); பலர் புகழ் திருவிற்பசும்பூண் பாண்டியன் பல் செருக் கடந்த செல்லுறழ் தடக்கைக் கெடாஅ