பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/457

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

445


நயமுறக் கூறியதால் இப் பெயரைப் பெற்றனர் என்பர். இவராற் பாடப் பெற்றோர் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனும், மலையமான் திருமுடிக்காரியும் அவன் மகன் சோழியவேனாதி திருக்கண்ணனும், கபிலரும், அவியனும் ஆவர். கிள்ளி வளவனின் உயிரைக் கூற்றமும், 'பாடுநர் போலக் கைதொழுது ஏந்தி இரந்து பெற்றிருத்தல் வேண்டும்’ என்று அவனிறந்தகாலைப்பாடியவர் இவர்.இது அவனது மேம்பாட்டை நன்கு விளக்குவதாகும். கணவனை இழந்த இல்லத்தரசியின் கூற்றாக விளங்கும் செய்யுள் (280) மிகவும் திட்பம் வாய்ந்ததாகும்.

மாற்பித்தியார் 151, 252

இவர் பெண்பாலர், தலைவன் ஒருவன் இவரைக் காதலித்துக் கைவிட்டுப் பின் துறவறம் பூண்டனன். அந்த நிலையை எண்ணிக் கலங்கியவராகச் செய்த செய்யுட்கள் இவை.

முரஞ்சியூர் முடிநாகராயர் 2

இவர் பெயருடையார் ஒருவர் தலைச்சங்கத்தில் வீற்றிருந்தனர் என்று இறையனாரகப் பொருள் உரையால் அறிகின்றோம். அவர் வேறு; இச் செய்யுளைப் பாடியவர் வேறு. இவர் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதனைப் பாடியவர். ஐம்பெரும் பூதத்து இயற்கையைச் சேரனது ஆற்றலுக்கு இணைத்துக் காட்டிப் போற்றியவர் இவர். பாரதப் போரில் அனைவரும் வீழ்ந்துபடப்பெருஞ்சோற்று மிகுபதம் கொடுத்தவன் இவன் என்று இவர் கூறுகின்றனர். சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை, அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும் முத்தீ விளக்கிற் றுஞ்சும் பொற்கோட்டு இமயமும் பொதியமும் என்று இவர் கூறுவர். இதனால், வடவிமயம் முதலாகத் தெற்கண் பொதியத்து வரையும் முனிவர்களும் அவர்களது தவமுயற்சிகளும் அக் காலத்தே நிகழ்ந்து வந்தன என்று அறியலாம். மோசி கீரனார் 50, 154, 159, 186

அகநானூற்று 392 குறுந்தொகையின் 59, 84, நற்றிணையின் 342 என்பனவற்றையும் பாடியவர் இவர் மோசி இவரது ஊரின் பெயர்; தென்பாண்டிச் சீமைக்கண் உள்ளது தொண்டை நாட்டிலும் மோசூர்' என்றொரு சிற்றுார் உளது. இவர் கீரர் குடியினர். சேரமான் தகடூர் எறிந்த பெருஞ் சேரல் இரும்பொறையையும், கொண்கானங் கிழானையும் பாடியவர் இவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்பாரது பெயரைக் கருதுமிடத்து, மோசி என்பதே பெயராகவும் இருக்கலாம் என்று கூறுவாரும் உளர். "தாது செய் பாவை யன்ன தையல் மாதர் மெல்லியல் மடநல்லோள்" எனத் தலைவியை நயமுடன்