பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/459

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

447


மிகவும் அழகாக ஒவியப்படுத்திக் காட்டும் இவரது செய்யுள் (புறம் 150) மிகுந்த பொருட் செறிவு உடையதாகும்.

வான்மீகியார் 358

இவர் 'வான்மீகம் என்னும் பெயரைப் பெற்றவர். புற்றுக் கவிந்து மூடும் அளவுக்குக் கடுந்தவம் இயற்றியவர். இச் செய்யுள் தவநெறியின் சிறப்பை எடுத்துக் கூறுகின்றது. விரிச்சியூர் நன்னாகனார் 292

இவர் விரிச்சியூரினர்; இதனை விரிஞ்சிபுரம் என்று கருதுவர். வீரன் ஒருவனது தறுகண்மையை இச் செய்யுளில் மிகவும் அழகாக எடுத்துக் கூறியுள்ளனர். இவர். விரியூர் நக்கனார் 332

இவர் விரியூரினர். நக்கனார் இவர் பெயர். ஒரு வீரனது மற

மாண்பை நயமாகக் கூறியுள்ளார். இவர்.

வீரை வெளியனார் 320

‘iரை என்பது ஊரின் பெயர். வெளியனார் இவர் பெயர். வீரவ நல்லூர், வீராபுரம் என வீரை என்ற பெயரிற் பல ஊர்கள் இக்காலத்தும் தமிழகத்தில் உள்ளன. ஒரு தலைவனுடைய இல்லக்கிழத்தி மனையறம் காக்கும் மாண்புச் செவ்வியை இச் செய்யுள் அருமையாக நமக்கு எடுத்துக் காட்டுகிறது. வெண்ணி குயத்தியார் 66

'வெண்ணி என்னும் ஊரிற் குயக்குடியில் தோன்றிய பெண்பாலர் இவர். சோழன் கரிகாற் பெருவளத்தானை இவர் பாடியுள்ளனர். 'புறப்புண் நாணி வடக்கிருந்த சேரன் நின்னினும் நல்லன்' என்று பாடும் இவர், தமிழரின் மற மாண்பை நமக்கு உணர்த்துகின்றனர். வெள்ளெருக்கிலையார் 233, 234

இவர் வேள் எவ்வியைப் பாடியுள்ளனர். அவன் இறந்த பின்னர், அவனுடைய பிரிவுக்கு இரங்கிப் புலம்புவாராக இவரியற்றிய செய்யுட்கள் மிக்க உருக்கந் தருவனவாகும். வெள்ளைக்குடி நாகனார் 35

இச் செய்யுளையும், நற்றிணையுள் 158, 196 ஆம் செய்யுட்களையும் செய்தவர் இவர். இவராற் பாடப் பெற்றோன் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் ஆவான். ஆட்சியாளர் உலகைக் காக்கவேண்டிய பொறுப்பை இச் செய்யுள்