பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/464

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

452

புறநானூறு - மூலமும் உரையும்


ஆதன் அழிசி - 71

இவன் ஒல்லையூர் பூதப் பாண்டியனின் நண்பருள் ஒருவன். அவனால் நன்கு மதிக்கப் பெற்றவன். ஆதன் என்பவனின் மகன் ஆகலாம். கோசர் குலத் தலைவருள் ஒருவனுடைய பெயர் 'ஆதன் எழினி’ எனக் காணப்படுகின்றது (அகம்.216). இவனும் அவனும் உடன் பிறந்தாராக இருக்கலாம்; இது ஆராய்தற்குரியது. ஆர்க்காட்டுத் தலைவனாக ஒருவனை நக்கண்ணையாரும் பாடியுள்ளனர்.

ஆதனுங்கன் - 175, 189

இவன் வேங்கடமலைப் பகுதிக்கண் ஒரு குறுநிலத் தலைவனாக விளங்கியவன். இவனைப் பாடியவர் கள்ளில் ஆத்திரையனார் என்பவர்.இக் கள்ளில் திரு முனைப்பாடிநாட்டுப் பகுதியைச் சார்ந்தது என முன்னர்க் கூறினோம். இவன் சிறந்த அறவாளனாக விளங்கியவன்; இதனை இச் செய்யுட்களால் அறியலாம்.

ஆந்தை - 71

இவன் ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியனது நண்பர்களுள் ஒருவன். வேறு செய்திகள் தெரிந்திலது. வெற்றிவேற் செழியனின் காலத்தவன் ஆகலாம். இவன் எயில் என்னும் கோட்டைக்கு உரியவனாகக் கூறப்படுகின்றான்.எயிற்பட்டினம் பாண்டிய நாட்டு ஊர்களுள் ஒன்று. ஆமூர் மல்லன் - 80

இவன் முக்காவல் நாட்டு ஆமூரைச் சார்ந்தவன்;

மற்றொழிலில் வல்லவன்; இவனைப் பொருது கொன்றவன் உறையூர்த் தித்தனின் மகனாகிய போர்வைக் கோப்பெருநற்கிள்ளி என்பவன். இவனது அழிவைப் பாடியவர் சாத்தந்தையார் என்னும் புலவர் ஆவர்.

ஆய் அண்டிரன் - 127 - 36, 135, 240 - 1, 374 - 5

இவன் வேளிருள் கொடையால் மேம்பட்ட தலைவர் சிலருள் ஒருவன்; பொதியில் மலைப்பகுதித் தலைவனாக விளங்கியவன். இரவலர்க்குக் கொடுத்து மகிழும் சிறந்த பண்பாளன். நீலநாகம் நல்கிய கலிங்கம், ஆலமர் செல்வதற்கு அமர்ந்தனன் கொடுத்த சிறப்பினன். உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், உமட்டுர்கிழார் மகனார் பரங்கொற்றனார், துறையூர் ஒடை கிழார், குட்டுவன் கீரனார், காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார், பரணர், பெருஞ் சித்திரனார், இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் முதலிய சான்றோர்கள்