பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/467

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

புலியூர்க்கேசிகன் 455

முதலியோராற் பாடப் பெற்றவன். 'ஓம்பா ஈகை மாவேள் எவ்வி என போற்றப் பெற்றவன். பல்வேல் எவ்வி, வாய்வாள் எவ்வி என இவனது போராற்றலைச் சான்றோர் கூறுவர். இவன் வேளிர் குடியைச்சார்ந்தவன்.இவன் இறந்தபின்னர், இவன் பெருமையைப் பாடியவர் வெள்ளெருக்கிலையார் ஆவர்.

எழினி - 158, 230

இவன் கடையேழு வள்ளல்களுள் ஒருவன், கூவிளம் கண்ணியை உடையோன், குதிரைமலை இவனுடையது என்பர். இதனால் இவன் அதியமானின் முன்னோர்களுள் ஒருவன் என்றும் கூறப்படுகின்றது. மத்தி என்பவன் சோழனின் ஏவலின்படி இவனைக் கொன்றதாகவும், இவன் பற்களைப் பறித்துவந்து வெண்மணி வாயிற்கோட்டைக் கதவிற் பதிந்து வைத்ததாகவும் கூறுவர். (அகம்:21). “ஊராது ஏந்திய குதிரைக் கூர்வேற் கூவிளங் கண்ணிக் கொடும்பூண் எழினி’ என இவனைக் கூறுவர். பெருஞ் சித்திரனார் (புறம்.158). இவனைக் தகடூர் பொருது வீழ்ந்த எழினி எனவும் கூறுவர் (புறம்230), அதியமானின் மகனான பொகுட்டு எழினி வேறு இவன் வேறு என்பர்.

ஏறைக்கோன் - 157

s இவன் குறவர் குடியிலே தோன்றியவன்; மலைநாட்டுப்பகுதி ஒன்றை ஆண்டுவந்த குறுநில மன்னன்; காந்தட்பூ மாலையை அணிபவன். இவனைப் பாடியவர் குறமகள் இளவெயினியார் ஆவர். இவனுடைய தகுதி மேம்பாடுகளை இச் செய்யுள் நன்றாக எடுத்துக் கூறுகின்றது."வேந்துடை அவையத்து ஓங்குபு நடத்தலும் என்பதனால், மூவேந்தருள் ஒருவருக்கு உட்பட்டவன் இவன் என்பதும் விளங்கும். சேரர் படைத்தலைவருள் ஒருவனாகக் கருதப்படுகின்றவனும், குடவாயிற் கீரத்தனாரால் அகத்துள் (44) குறிக்கப் படுவோனுமான ஏற்றை என்பான் இவனாகலாம் என்பாரும் உளர்.

ஏனாதி திருக்கிள்ளி - 167

இவன் சிறந்த கொடையாளியாகவும், போர் மறவனாகவும்

திகழ்ந்தவன். கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்

இவனைப் பாடியுள்ளனர். 'ஏனாதி’ என்பது அரசகருமத் தலைவருள் சிறந்தார்க்கு அளிக்கப் பட்டதொரு சிறப்புப் பெயர்; அதனைப் பெற்றவன் இவன். இவனது மற மேம்பாட்டை இச் செய்யுள் விளக்கமாகவும், அருமையாகவும் எடுத்துரைக்கின்றது. சோழிய ஏனாதி திருக்குட்டுவனும், சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமா வளவனும், சேரமான் குட்டுவன் கோதையும் இவன் காலத்திருந்தவர்களாவர்.