பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/473

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

461


என்றான் இவன். அவ்வாறே அவரும் வந்து இவனது நடுகல்லருகே அமர்ந்து உயிர் துறந்தனர். இவன் வரலாறு விரிவானது. -

சிறுகுடிகிழான் பண்ணன் - 70, 173, 388

கொற்றங் கொற்றனார், கோவூர் கிழார், செயலூர் இளம்பொன் சாத்தன் கொற்றனார், சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் முதலியோராற் பாடப் பெற்றவன் இவன். இவனுடைய சிறுகுடி காவிரிக்கு வடகரையில் இருந்தது. ‘வென்வேல் இலைநிறம் பெயர ஒச்சி, மாற்றோர் மலைமருள் யானை மண்டமர் ஒழித்த கழற்கால் பண்ணன்' என, இவனது மறச் செறிவை உரைப்பர் (அகம். 177). இவனைப் பசிப்பிணி மருத்துவன்’ எனப் போற்றுகின்றான் கிள்ளிவளவன் (173).

சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறை - 13

இவன் சேரமான்களுள் இரும்பொறை மரபினருள் ஒருவன். உறையூர் ஏணிச்சேரி முடமோசியாரின் நண்பன் இவன். சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி இவனது வஞ்சியை முற்றுகையிடப் போரில் வென்று சிறப்புற்றவன். தன் நகரையே முற்றிய பகைவனையும், அவனுக்கு ஆபத்தான நிலையில், அழிக்க நினையாது காத்துப் போகவிட்டவன். -

சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன் - 369

இவனைப் பரணர் பாடினர்; இவன் குட்ட நாட்டுச் சேரர் குடியினன். ஐந்தாவது பதிற்றுப் பத்தின் தலைவன். அதனைப் பாடிய பரணருக்கு உம்பற்காட்டு வாரியையும், தன் மகன் குட்டுவன் சேரலையும் பரிசிலாக வழங்கியவன். கடல் பிறக்கோட்டிய சேரன் செங்குட்டுவனும் இவனும் ஒருவனே என்பர். ‘செருச்செய் முன்பொடு முந்நீர் முற்றி, ஒங்குதிரைப் பெளவம் நீங்க ஒட்டிய, நீர் மாண் எஃகம் என இவன் கடலிடத்து பொருது பகைவளர ஒட்டியதனை அகநானூறு கூறும் (அகம் 212). "தாழா ஈகைத் தகை வெய்யோய் என்று, பரணர் இவனைப் போற்றித் தமக்குப் பரிசில் தருமாறு வேண்டுகின்றனர். (369)

சேரமான் கடுங்கோ வாழியாதன் - 8, 14,387

இவன் சேரருள் இரும்பொறை மரபினன்; இக் காலைக் கோவைப் பகுதிக்கண் விளங்கிய கடுங்கோ நாட்டை ஆண்டு வந்தவன். பதிற்றுப்பத்துள் ஏழாம் பத்தின் பாட்டுடைத் தலைவன். அதனைப் பாடிய கபிலருக்கு, நூறாயிரம் காணமும், 'நன்றா’ என்னும் மலையேறிக் கண்ட நாடும் பரிசிலாக வழங்கியவன். 'ஒடுங்கா உள்ளத்து, ஒம்பா வீகைக், கடந்தாடு தானைச் சேரலாதன் இவனாவான் (புறம்.8). கபிலரோடு இவன்