பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/481

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

HeÓlubiš Göáiscir_ o 469

சோழன் செங்கணான் - 74

இவன் திருப்போர்ப் புறப்போரிற் சேரமான் கணைச் காலிரும்பொறையை வென்று குடவாயிற் கோட்டத்துச் சிறையிட்டவன். பொய்கையார் பாடிய களலழி நாற்பதின் பாட்டுடைத் தலைவன்.

சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி - 370, 378

இவன் செருப்பாழி என்னும் கோட்டையை வென்றவன். மிக்க வீரமும் கொடையியல்பும் கொண்டவன். இவனைப் பாடியவர் ஊன்பொதி பசுங்குடையார் ஆவர்.

சோழன் நலங்கிள்ளி - 27 - 33, 43 - 45, 47, 68, 73, 75, 225, 382, 400

இவன் சோழகுல மன்னருள் தமிழ்ப்புலமை உடையோராக விளங்கிய சிலருள் ஒருவன். பாண்டிய நாட்டிலிருந்த ஏழு பொன் கோட்டை என்னும் ஏழரண்களையும் அழித்துக் கைக்கொண்ட வெற்றி வீரன். தன் உடன்பிறந்தானோடு பகைகொண்டு, அவனுக்குரிய ஆவூரையும், உறையூரையும் முற்றுகையிட்டுப் போர் செய்தவன். இவன் இளவலாக 'மாவளத்தான் என்பான் ஒருவன் விளங்கினான். இவனைப் பாடிய புலவர்கள் உறையூர் முதுகண்ணன் சாத்தனார், கோவூர்கிழார், ஆலத்துர்கிழார் முதலியோராவர். ஆலத்துர் கிழார், சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடியவர்; இவனும் அந்தக் காலத்தவனாகலாம். இவர், இவனது படைப் பெருக்கத்தை மிகவும் நயமாக எடுத்துக் கூறுகின்றார். சேட்சென்னி நலங்கிள்ளி’ ‘தேர் வண்கிள்ளி' எனவும் இவன் பெயர் வழங்கும். உறையூர் முதுகண்ணன் சாத்தனார் இவனுக்கு நிலையாமையை உணர்த்தி அறவழியிற் செல்லுமாறு இவனைத் தூண்டினர். கோவூர்கிழாரும் இவனுக்குப் பல நல்லுரைகளைக் கூறினர். இவற்றால் இவனுடைய படையாண்மைப்பற்றுச் சிறிது மறைய, இவன் அருளாளனாகவும், சான்றாண்மையாளனாகவும் மாறினான்; அரச நிர்வாகம் தக்கோனிடம் அமையும்போது அது புகழ் பெற்று விளங்குவதையும், தகாதவரிடம் சேரும்போது அதனால் நாடே துயருற்று நலிதலையும் (புறம் 76) இவன் அருமையாக எடுத்துரைத்துப் பாடியுள்ளனன். இவனுடைய மற்றொரு செய்யுள் (73) இவனது ஆண்மைநலத்தை விளக்குவதாகும். சோழன் நலங்கிள்ளி' என வரும், பாடினோர் வரலாற்றுப் பகுதியையும் பார்க்கவும். சோழன் நல்லுருத்திரன் - 190

இவனைப் பற்றிப்பாடினோர் வரலாற்றுப் பகுதியுட் காண்க