பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/484

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

472

புறநானூறு - மூலமும் உரையும்


குறிக்கப்படும். இவன் மகன் போர்வைக் கோப்பெருநற்கிள்ளி என்பவன். மகனோடு யாது காரணத்தாலோ பகை கொண் டிருந்தவன் இவன். இவனைப் பாடிய புலவர் வடமவண்ணக்கண் பேரிசாத்தனார், சாத்தந்தையார், நக்கீரர், பரணர் முதலியோர் ஆவர். -

தேர்வண் மலையன் - 125

இவன் சிறந்த மறமாண்பினன்.சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளிக்குப் படைத் துணையாக அமைந்து, சேரமானை வெல்ல உதவியவன். இவனைப் பாடியவர் வடமவண்ணக்கண் பேரிசாத்தனார் ஆவர். இவனே மலையமான் திருமுடிக்கிள்ளி எனவும், அவனுக்கு முன்னோன் இவன் எனவும் கருதுவர். தொண்டைமான் - 95

காஞ்சி நகரைத் தலைநகரமாகக் கொண்டு அரசாண்ட மரபினரைச் சார்ந்தவன். இவன். இவன் பெயர் தொண்டைமான் இளந்திரையன் எனவும் வழங்கும். இவன் சிறந்த கொடையாளி;. நல்ல தமிழ்ப் புலவனும் ஆவன். பெரும் பாணாற்றுப் படைக்குப் பாட்டுடைத் தலைவன் இவனே.சோழனுக்கும் பீலிவளை என்னும் நாகநாட்டு இளவரசிக்கும் பிறந்த காதல் மகன் இவனென்று வரலாறு உரைக்கும். இவனியற்றிய பாடல்கள் நற்றிணையுள் (194, 99, 106) மூன்று செய்யுட்களும், புறநானூற்று 185 ஆம் செய்யுளும் ஆகும். இவனைப் பற்றிய பல செய்திகளையும் பெரும்பாணாற்றுப்

படை மிகவும் விளக்கமாகக் கூறுகின்றது. இளந்திரையம் என்னும்

நூல் இவனால் இயற்றப் பெற்றது என்பர். இவனுக்கும் அதியமான் நெடுமான் அஞ்சிக்கும் பகைமை ஏற்பட்டபோது ஒளவையார் இவன்பாற் சென்று இருவரையும் சமாதானமாகப் போகச் செய்வதற்கு விரும்பினார். அவ் வேளையில் இவன் தன் படைக்கலக் கொட்டிலை ஒளவையாருக்குக் காட்ட, அவர் அதுவே கருவாகக் கொண்டு அதியனின் மறமாண்பை இவனுக்கு நயமாக எடுத்துரைக்கின்றனர். அச் செய்யுள் இது. நம்பி நெடுஞ்செழியன் - 239

இவன் பாண்டியர் குலத்தவன், சிறந்த வீரன். இவனைப் பாடியவர் பேரெயின் முறுவலார் ஆவர். இச் செய்யுள் இவனது கொடைச் சிறப்பையும், வென்றி மேம்பாட்டையும் விரிவாக எடுத்துக் கூறுகின்றது. இவன் மடிந்த ஞான்று செய்த இச் செய்யுளுள், செய்ப எல்லாம் செய்தனன்’ என்று இவனைப் பற்றிக் கூறுகின்றனர். அத்துணை மேம்பாடுகளைப் பெற் றிருந்தவன் இவன்.