பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/491

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

479


அல்லை என்று சொல்ல, நாணமுற்று வருந்தினான். இவனுடைய பண்பு மேம்பாட்டை அவர் இச் செய்யுளுள் வியந்து பாடுகின்றார், முக்காவனாட்டு ఇఅi மல்லன் - 80 - 82 - -

இவன் முக்காவல் நாட்டு ஆமூரைச் சார்ந்தவன். மல்லனாக விளங்கியவன். உறையூர்ச் சோழன் தித்தனின் மகனாகிய போர்வைக்கோப் பெருநற்கிள்ளியோடு பொருது இறந்தவன். கிள்ளியின் இவ் வெற்றியைப் பாடியவர் சாத்தந்தையார்.

மூவன் - 209

இவன் ஒரு குருநில மன்னன். விரைந்து பரிசில் தராமை காரணமாகப் பெருந்தலைச் சாத்தனாரால் இகழ்ந்து பாடப் பெற்றவன். ஈயாயாயினும் இரங்குவேன் அல்லேன், நோயிலை ஆகுமதி பெரும என்று கூறி, இவனது குறைபாட்டை நினைந்து வருந்துகின்றார் புலவர். எனினும், ‘செருவெஞ் சேஎய்’ எனவும், “நின் நசைதர வந்து' எனவும் இவனது சிறப்புக்களையும் கூறுகின்றனர். ஆகவே, காலந் தாழ்த்தவன் புலவரைத் தக்கவாறு போற்றி விடுத்தனன் என்றே கொள்ளல் வேண்டும்.

வடிம்பலம்ப நின்ற பாண்டியன் - 9

இவன் கடலின் சீற்றத்தைத் தணிக்க 'முந்நீர் விழாக் கண்டவன். 'முந்நீர் விழவின் நெடியோன்’ என இவனை இச் செய்யுள் போற்றுகின்றது. 'ஆழி வடிம்பலம்ப நின்றோன்' எனப் பிறரும் கூறிப் போற்றுவர். -

வல்லார் கிழான் பண்ணன் - 181

இவன் வல்லார்’ என்னும் ஊருக்கு உரியவன். வேளாண் மரபினன். குறுநிலத்தலைவன். இவனைப் பாடியவர் சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார் ஆவர். இவன் நாடு காட்டுப் பகுதியைச் சார்ந்திருந்தது என்பது செய்யுளால் விளங்கும். ഖി ി-153 - 2, 158, 214 -

இவன் கடையேழு வள்ளல்களுள் ஒருவன். கொல்லி மலைக்கும், அதனையொட்டிய பகுதிகட்கும் தலைவனாக விளங்கியவன். இவன் பெயர் ஆதனேரி எனவும் காணப்படும்.

இவன் வில்லாற்றலிற் சிறந்தவன். கொடையாண்மையிற்

பெரியோன். எனினும், சேரர்க்கும் இவனுக்கும் பகைமை உண்டாகச் சேரர்க்காக மலையமான் திருமுடிக்காரி படையொடு வந்து இவனை அழித்தனன் என்பது வரலாறு. இவனைப் பாடியவர்கள் வன்பரணர், கழைதின் யானையார் ஆகியோர்.