பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/493

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

481


481

புறநானூற்றின் திணைகள்

(எண் - செய்யுள் எண்)

கரந்தைத் திணை : பகைவர் பசுக் கூட்டங்களைக் கைப்பற்றிச் சென்ற போது அவரை வென்று அவற்றை மீட்டு வருதல் 259 - 261, 263, 265, 286,287, 290-91,298.

காஞ்சித் திணை: பகை அரசன் போருக்கு வந்து விடுகின்றான்; அப் போது ஓர் அரசன் காஞ்சிப் பூவைச் சூடிக்கொண்டு தன் இடத்தைப் பாதுகாத்து நிற்றல். 71-73, 281, 293, 336,354, 356-360,365, 366.

கைக்கிளைத் திணை: ஒருதலைக் காமம். இது ஆண்பாற் கூற்று, பெண்பாற்கூற்று என இருவகைப்படும். 83-85,

தும்பைத் திணை : பகைவரோடு போர் செய்தலை நினைத்துத் தும்பைப் பூவைச்சூடிக்கொள்ளல்.62,63,80,87 -90, 273-278, 283, 284, 288, 294, 295,300, 304,307, 309-311. நொச்சித் திணை: மதிலைக் காக்கும் வீரர்கள் போர்ப்பூச் சூடியிருத்தலைப் புகழ்வது. 109 - 111,27.1,27.2,299. பாடாண் திணை : ஒருவனுடைய கீர்த்தியும், வலியும், கொடையும், அளியும் ஆகிய இவற்றைத் தெரிந்து சொல்லுதல். 2,3,5,6,8-15,30,32, 34, 35, 38-40, 48-50, 55,56,58, 59, 60,64, 67 - 70,91, 92,95-97, 101 - 103, 105-108, 122-124, 126-142, 148 – 165, 168, 169, 171 - 173, 175– 177, 184, 196 - 212, 215, 216, 266, 367,374,-400.

பெருந்திணை : பொருந்தாக் காமம். 143 - 147

பொதுவியல்: எல்லாத் திணை களுக்கும் பொதுவாகிய இலக்கணங் களைக் கூறுவது. 18,24,27-29, 65, 74, 75, 112, -121, 182, 183,185-195, 214,217-243,245-250, 253-256, 280, 362-64.

வஞ்சித் திணை: ஓர் அரசன் வஞ்சிப் பூவைத் தலையிலே சூடிப் பூமியைக் கைக்கொள்ள எண்ணுதல்.4,7,16,26, 41, 45-47, 57,98, 100,213,292. வாகைத் திணை: வாகைப் பூவைத் தலையிலே சூடிப், பகைவரைக் கொன்று ஆரவாரித்தல். 17,19-22, 25, 26, 31,33; 37,42-44,51-54,61,66, 76-79, 81, 82, 86, 93, 94, 98 - 100, 104,125, 166-167, 170, 174, 178 - 181, 251, 252,279, 285,290, 305 - 306, 308, 312-322, 336-335, 368373.

வெட்சித் திணை: வீரர்கள் அரசன் அனுமதியைப் பெற்றேனும், பெறாம லேனும் போய்ப் பகைவர்களுடைய பசுக்களைக் கவர்தல். 257, 258, 262, 269,297.

திணை மறைந்து போன பாடல்கள்: 244, 267,268,282,289, 323-325, 355,361.