பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ucâuiá caâas, 39

எறிதலால் 13. படை - கொளுத்து மூட்டுவாய். 1. மெய்ம்மறந்து - அறிவு மயங்கி 13. அறல் - ஆற்றுக் கருமணல். -

26. நோற்றார் நின் பகைவர்!

பாடியவர்: மாங்குடி கிழவர், மாங்குடி மருதனார் எனவும் பாடம். பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். திணை: வாகை. துறை: அரச

ᎧᏁᎱᎢᎧöᎠᏜ.

(நான் மறையாளர் தொடர்போடு அரசன் வேள்வி யாற்றியது பற்றிக் கூறுகிறது செய்யுள். 'மாற்றார் என்னும் பெயர் பெற்றுக் களத்தில் ஆற்றாராய் வீழினும், சுவர்க்கத்து வாழ்வார் ஆதலின், அவர் நோற்றார்’ என அவரைப் புகழ்ந்தது போல, இவனது வெற்றி மேம்பாட்டைக் கூறுகின்றனர் ஆசிரியர்)

நளிகடல் இருங் குட்டத்து

வளி புடைத்த கலம் போலக்,

களிறு சென்று களன் அகற்றவும் களன் அகற்றிய வியல் ஆங்கண்

ஒளிறு இலைய எஃகு ஏந்தி, 5

அரைசு பட அமர் உழக்கி, உரை செல முரசு வெளவி,

முடித்தலை அடுப்பாகப், புனல் குருதி உலைக் கொளிஇக், . , தொடித்தோள் துடுப்பின் துழந்த வல்சியின், 1 O

அடுகளம் வேட்ட அடுபோர்ச் செழிய! ஆன்ற கேள்வி, அடங்கிய கொள்கை, நான்மறை முதல்வர் சுற்ற மாக, மன்னர் ஏவல் செய்ய, மன்னியல் வேள்வி முற்றிய வாய்வாள் வேந்தே! 15 நோற்றோர் மன்ற நின் பகைவர் நின்னொடு மாற்றார் என்னும் பெயர் பெற்று, ஆற்றார் ஆயினும், ஆண்டுவாழ்வோரே.

(* மன்னர் செய்தொழில் அயர மன்னிய - புறத்திரட்டு) . •

இப் பாடலுள் இருவகை வேள்விகள் கூறப்படுகின்றன.

ஒன்று கள வேள்வி; மற்றொன்று மறைமுறை வேள்வி. “கடல் .”

நடுவே நீர் கிழித்துச்செல்லும் கலம்போலப்,பகைவர்படைநடுவே களிறுகள் ஊடறுத்துப் பிளந்து செல்லும். அவ்வூடுவழியே வேலேந்திச் சென்ற வீரர், பகைவரைக் கொன்று குவித்து, அவர்