பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

புறநானூறு - மூலமும் உரையும்


31. வடநாட்டார் தூங்கார்

பாடியவர்: கோவூர்கிழார். பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி. திணை: வாகை துறை: அரசவாகை, மழபுல வஞ்சியும் ஆம். சிறப்பு: வடபுலத்து அரசர்கள் இச்சோழனது மறமாண்பைக் கேட்டு அஞ்சிய அச்சத்தால் துஞ்சாக் கண்ணர் ஆயினமை.

(இச் செய்யுள் தலைவனது போர்மற மேம்பாட்டைக் கூறுதலால் அரசவாகை ஆயிற்று. அவன் பகைவர் நாட்டை அழித்தமை பற்றியும் கூறுதலான் மழபுல வஞ்சியாகவும் கொள்ளப்படும். 'பொருளும் இன்பமும் அறத்து வழிப்படுஉம்' என்னும் சிறந்த ஒழுகலாற்று நெறியினை இச் செய்யுள் கூறுதல்

காணலாம்.)

சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும் அறத்து வழிப்படுஉம் தோற்றம் போல, இருகுடை பின்பட ஓங்கி ஒருகுடை

உருகெழு மதியின் நிவந்துசேண் விளங்க, நல்லிசை வேட்டம் வேண்டி, வெல்போர்ப் 5

பாசறை யல்லது நீயொல் லாயே, நூதிமுகம் மழுங்க மண்டி, ஒன்னார் கடிமதில் பாயும்நின் களிறு அடங் கலவே, போர் எனில் புகலும் புன்ைகழல் மறவர், - காடிடைக் கிடந்த நாடுநனி சேஎய 10 செல்வேம் அல்லேம்' என்னார்; கல்லென் விழவுடை ஆங்கண் வேற்றுப்புலத்து இறுத்துக், குணகடல் பின்னதாகக் குடகடல் வெண்தலைப் புணரி நின் மான்குளம்பு அலைப்ப வலமுறை வருதலும் உண்டு என்று அலமந்து 15

நெஞ்சு நடுங்கு, அவலம் பாயத், துஞ்சாக் கண்ண, வடபுலத்து அரசே,

சிறப்பு மிகுந்த முறைமையால், பொருளும் இன்பமும் அறத்திற்குப் பிற்பட்டனவாகவே கருதப்படும். அதுபோல, அறம் சிறந்த நின் கொற்றக்குடை, சேரபாண்டியர் குடைகளுக்கும் முற்பட்டதாகச் சிறப்புடன் தோன்றும். முழு நிலவு போன்று நெடுந்தொலைவுக்கும் நின் புகழ் சிறப்புடன் விளங்கும். அதனையே மென்மேலும் விரும்பிப் போர்ப் பாசறையை விட்டுப் பிறவற்றை நீயும் நாடுவதில்லை. கோட்டுமுகம் மழுங்க மோதிப் பகைவரின் வன்மையான கோட்டைச்சுவரில் பாயும் நின் யானைகளும் என்றும் அடங்கி இருப்பன அல்ல. வீரக்கழல்