பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

47


புனைந்த நின் மறவரோ போர் என்றால் ‘யாம்' என்று கூறி எழுபவர். தூரத்து நாடு ஆயிற்றே; 'அங்கு யாம் வாரோம் என்றும் அவர் சொல்வதில்லை. ஆரவாரமான வேற்று நாட்டு வெற்றி விழாவிலே கலந்து கொண்டு, கீழ்க்கடல் பின்னாக, மேற்கடல் அலைகள் நின் குதிரைக் குளம்புகளை மோத, இந்நாட்டை வலம் வந்து கொண்டே இருப்பாய்’ என்று அஞ்சி, நெஞ்சம் நடுங்கித் துயரம் பெருகத், தூங்காத கண்ணராக, வடபுலத்து அரசுகள் விளங்குகின்றனவே! (சோழனின் வீரமுழ்க்கம் வட வேந்தரைத் தூங்காதாராக்கிற்று என்று வியந்தது இது)

சொற்பொருள்: 2. ஓங்கிய உயர்ந்த 4. உருகெழும்தி முழுநிலவு. 6. ஒல்லாய் - நாட மாட்டாய், 9. புனைகழல் கழல் புனைந்த 12. வேற்றுப் புலம் - வேற்று நாடு.

32. பூவிலையும் மாடமதுரையும்

பாடியவர்: கோவூர்கிழார். பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி. திணை: பாடாண். துறை: இயன்மொழி. சிறப்பு: சோழனது நினைத்தது முடிக்கும் உறுதிப்பாடு.

('கடும்பின் அடுகலம் நிறையாக, நெடுங்கொடிப் பூவா வஞ்சியும் தருகுவன்’ எனவும், விறலியர் பூவிலை பெறுக’ என 'மாட மதுரையும் தருகுவன்’ எனவும், சோழனது கொடை இயல்பை வியந்து கூறினர். அதனால் இது இயன்மொழி ஆயிற்று. 'பாடுகம் வம்மினோ எனக் கூறுதலின், பிறரையும் ஆற்றுப்படுத்தும் முகத்தான் உரைத்தது எனவும் கருதலாம்)

கடும்பின் அடுகலம் நிறையாக, நெடுங்கொடிப் பூவா வஞ்சியும் தருகுவன், ஒன்றோ? வண்ணம் நீவிய வணங்குஇறைப் பணைத்தோள், ஒண்ணுதல், விறலியர் பூவிலை பெறுக!' என, - மாட மதுரையும் தருகுவன்; எல்லாம் -- 5

பாடுகம் வம்மினோ, பரிசில் மாக்கள்! தொன்னிலக் கிழமை சுட்டின், நன்மதி வேட்கோச் சிறாஅர் தேர்க்கால் வைத்த பசுமண் குரூஉத்திரள் போல, அவன் - கொண்ட குடுமித்து, இத் தண்பணை நாடே 10

இச் சோழன் பகைவரை அழிக்குந் திறல் மிக்கவன்; எனினும், இரவலர்பால் பேரருள் பாராட்டுபவன். அவன்பாற் சென்று, உணவில்லையென அடுகலம் நீட்டினால், அவன் அதிற் சோறு பெய்பவன் அல்லன்; அவன் தலைநகரான கருவூரையே அதற்கு