பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன்

51

புலியூர்க்கேசிகன்- - 51

படுபறி யலனே, பல்கதிர்ச் செல்வன், யானோ தஞ்சம்; பெரும! இவ்வுலகத்துச் சான்றோர் செய்த நன்றுண் டாயின், - 20

இமயத்து ஈண்டி, இன்குரல் பயிற்றிக் கொண்டல் மாமழை பொழிந்த நுண்பல் துளியினும் வாழிய பலவே!

ஆயிழை நல்லாளின் கணவனே! ஆவின் மடியினை அறுத்தும், மங்கல மகளிர் கருவினைச் சிதைத்தும், அறிவு தந்த ஆசானையே பழித்தும் கொடுமை செய்தவர்க்குங் கூடக் கழுவாய் உண்டு; ஆனால், உலகமே தலைகீழாகப் போனாலும் ஒருவர் செய்த நன்றியை அழிக்க முயன்றவர்க்கு உய்வே கிடையாது’ என்று அறவோர் கூறுவர். காலையும் மாலையும் புறாக்கருப் போன்ற புன்செய் வரகைப் பால் பெய்து சமைத்துத் தேனுடன் கலந்தும், அத்துடன் கொழுத்த முயலின் சூடான இறைச்சியைச் சேர்த்தும் தின்பர் என சுற்றத்தார். அவரோடு, இலவமரம் ஓங்கி வளர்ந்துள்ள பரந்த மன்றத்தில், கரவறியாத உள்ளத்தோடு நினைத்தன வெல்லாம் பேசிப்பேசி, பெரிய கட்டிகளான கொழுமையான சோற்றை உண்டு மகிழ்பவர் பாணர்கள். இவர்க்கு அழியாத செல்வம் முழுவதும் அடையுமாறு செய்தவன் எம் கோமானாகிய வளவன் நீயே யன்றோ! வாழ்க என்று நின் பெருமைமிகுந்த வலிய திருவடிகளைப்பாடேனாயின், கதிரவனும்

தோன்றான். பெருமானே! யானோ எளியவன்! இவ்வுலகத்திலே "

சான்றோர் செய்த நன்மைகள் இருக்குமானால், இமயச் சாரலில் திரண்டு, இனிய இடியோசையைச் செய்து மேகங்கள் பொழியும் நுண்ணிய மழைத்துள்களிலும் பல ஆண்டுகளின் மேலாக நீ வாழ்வாயாக! ("நன்று உண்டாயின்’ என்றது, உறுதியாக நிறைவேறும் என்னும் தேற்றம் பற்றிக் கூறியது)

சொற்பொருள்: 10. புன்கம் - சோறு. 11. கொழுஞ் சூடு - கொழுவிய சூட்டிறைச்சி. கிழித்த தின்ற, 12. இரத்தி - இலவமரம். 14. ஆர்ந்த அருந்திய அமலை - திரளை 17, பீடு கெழு பெருமை பொருந்திய, 19. தஞ்சம் - எளியேன். 20. நன்றி உண்டாயின் - நல்வினை உண்டாயின் 21 கொண்டல் - கீழ்க் காற்று. 35. உழுபடையும் பொருபடையும்! பாடியவர்: வெள்ளைக்குடி நாகனார். பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன். திணை: பாடாண். துறை: செவியறிவுறுஉ. சிறப்பு: அரச நெறியின் செவ்விபற்றிய செய்திகள். சிறப்பு: 'பாடிப் பழஞ் செய்க் கடன் வீடு கொண்டது என்று இதனைக் குறிப்பர். -

}