பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

புறநானூறு - மூலமும் உரையும்



| இவரே, புலனுழுது உண்மார் புன்கண் அஞ்சித், தமதுபகுத்து உண்ணும் தண்ணிழல் வாழ்நர்! களிறுகண்டு அழுஉம் அழாஅல் மறந்த 5 புன்றலைச் சிறாஅர் மன்று மருண்டு நோக்கி , விருந்திற் புன்கண்நோ வுடையர்! கேட்டனை யாயின், நீ வேட்டது செய்ம்மே!

புறாவின் துயரமன்றியும் பிற துயரங்கள் பலவற்றையும் நீக்கியவர் மரபினன் நீ! இவரோ, கற்றோர் வறுமை அடையாத வாறு தம் விளைபொருளைப் பகுத்து உண்ணும் குளிர் நிழல் வாழும் மரபினர்! யானையைக் கண்டதும் தம் இளமையால் மகிழ்பவர். அழுகையையும் மறந்து நிற்பவர். மிக்க சிறு பிள்ளைகள் கூடியிருப்போரைப் புதியவராகக் கண்டு வருந்தும் புதியதோர் வருத்தமும் உடையவர். யாம் சொன்னதைக் கேட்டனை! ஆனால், நின் விருப்பப்படியே செய்க. (அருளும் அரசும் புலவர் உள்ளத்திலே கலக்க, அங்கே அருள் ஒன்றே அரசினும் சிறந்து எழக் காட்டுவது இப் பாடல்)

சொற்பொருள்: 4. தமது - தம்முடைய பொருளை, 7. புன்கண் - வறுமையை விருந்திற் புன்கண் நோவுடையர் - முன்பு அறியாத புதியதோர் வருத்தத்தை உடையவர்.

47. புலவரைக் காத்த புலவர்!

பாடியவர்: கோவூர் கிழார். பாடப்பட்டோன்: காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி. திணை: வஞ்சி. துறை: துணை வஞ்சி. குறிப்பு: சோழன் நலங்கிள்ளியிடமிருந்து உறையூர் புகுந்த இளந்தத்தன் என்னும் புலவனை, ஒற்று வந்தான் என்று கொல்லப் புகுந்தவிடத்துப், பாடி உய்யக்கொண்ட செய்யுள் இது.

(சந்து செய்து புலவரது உயிரை உய்யக் கொண்டமையின் துணைவஞ்சி ஆயிற்று. இளம்பூரணனார் இத் துறைக்கே மேற்கோள் காட்டுவர். மேற்செலவின்கண் அடங்காமையின் துணைவஞ்சியன்று என்றும், பாடாண்திணைச் செய்யுள் என்றும் உரைப்பர் நச்சினார்க்கினியர் (தொல்.புறத்.சூ.8). பழிகாப்புச் செவியுரை அங்கதம் எனவும் அவர் விளக்குவர். (தொல், செய் சூ, 128 உரை), 移轴 .

வள்ளியோர்ப் படர்ந்து, புள்ளின் போகி, நெடிய என்னாது, சுரம்பல கடந்து, வடியா நாவின் வல்லாங்குப் பாடிப், பெற்றது மகிழ்ந்து, சுற்றம் அருத்தி, ஒம்பாது உண்டு, கூம்பாது வீசி, 5