பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

புறநானூறு - மூலமும் உரையும்


எதிர்த்துநின்று உயிர்பிழைக்க முடியுமோ? அதேபோன்று, வடநாட்டு வேந்தர்கள் வாடுமாறு, அவரை ஒழிக்கக் கருதி நீ தேரில் அமர்ந்து போருக்கு எழுந்து விட்டால், வழுதியே! இப் பெரிய உலகில் நினக்கு எதிர்நின்று உயிர்பிழைத்து வாழ்வார்தாம் யாரோ? மீன்சுடும் நாற்றம் மிகுந்த பகைவரின் வயல்களெல்லாம் புதுவருவாயின்றி அழியும். தெய்வ வழிபாடுகள் நீங்கிப் பலி இடங்கள் பாழ் விழுந்த இடங்களிலே காட்டுக் கோழிகள் முட்டையிடும். இவ்வாறே, பகைவரின் வளநாடுகள், அவர் நின்னைப் பகைத்தனர் என்றால், முற்றவும் அழித்து காடாகிக் கெடுமே!

சொற்பொருள்: 2 முணங்குநிமிர் - சோம்பல் முரித்தல். 9. நெடுங்கொடி - நெடிய ஒழுங்கு 10. வலக்கும் - சூழும்.12. கலிகெழு கடவுள் - முழவு முதலாகிய ஒலிபொருந்திய தெய்வ இடங்கள்.14 நாய் - சூதாடுங் கருவி.15. வல்லின் நல்லகம் - சூதாடு கருவியினது நல்ல மனையாகிய இடம் 16. கான வாரணம் - காட்டுக் கோழி.

53. செந்நாவும் சேரன் புகழும்!

பாடியவர்: பொருந்தில் இளங்கீரனார் பாடப்பட்டோன்: சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை. திணை: வாகை. துறை:

அரச வாகை குறிப்பு: கைகோத்து ஆடும் தெற்றியாட்டம் பற்றிய செய்தி.

(அரசனது புகழை மேம்படுத்திக் கூறினார். கபிலரது புலமையை வியந்து கூறியுள்ள திறமும் வியத்தற்கு உரியது)

முதிர்வார் இப்பி முத்த வார்மணல், கதிர்விடு மணியின் கண்பொரு மாடத்து, இலங்குவளை மகளிர் தெற்றி ஆடும் விளங்குசீர் விளங்கில் விழுமம் கொன்ற களங்கொள் யானைக், கடுமான் பொறைய! 5

விரிப்பின் அகலும்; தொகுப்பின் எஞ்சும்; மம்மர் நெஞ்சத்து எம்மனோர்க்கு ஒருதலை கைம்முற் றலநின் புகழே, என்றும், * ஒளியோர் பிறந்தஇம் மலர்தலை உலகத்து வாழேம் என்றாலும் அரிதே தாழாது 10

செறுத்த செய்யுள் செய்செந் நாவின், வெறுத்த கேள்வி, விளங்குபுகழ்க் கபிலன் இன்றுளன் ஆயின், நன்றுமன் என்ற நின் ஆடு கொள் வரிசைக்கு ஒப்பப்

பாடுவன் மன்னால், பகைவரைக் கடப்பே, 15