பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

புறநானூறு - மூலமும் உரையும்



உட்கு - அச்சம் ("உருவுட்காகும்” தொல், சொல், உரி, சூ4) 18. இன்நீர் ஆகலின் நீர் இத் தன்மையர் ஆகுதலின், 24 நயவ போலவும் - நியாயத்தையுடையன போலே இருக்கவும். 27. பொது மொழி - சிறப்பு இல்லாத மொழி.30. கோள்மா குயின்ற - புலி வடிவாகச் செய்யப்பட்ட 32. பொறி - இலாஞ்சனை, அடையாளக் குறி.

59. பாவலரும் பகைவரும்

பாடியவர்: மதுரைக் கூலவாணிகள் சீத்தலைச் சாத்தனார், பாடப்பட்டோன்: பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன். திணை: பாடாண் துறை: பூவை.நிலை.

(அரசனை ஞாயிற்றோடும் திங்களோடும் உவமித்தமையால், இச் செய்யுள் பூவை நிலை ஆயிற்று) ஆரம் தாழ்ந்த அணிகிளர் மார்பின், தாள்தோய் தடக்கைத் தகைமாண் வழுதி! வல்லை மன்ற, நீநயந்தளித்தல் தேற்றாய், பெரும பொய்யே, என்றும் காய்சினம் தவிராது கடல் ஊர்பு எழுதரும் 5

ஞாயிறு அனையை, நின் பகைவ்ர்க்குத் திங்கள் அனையை, எம்மனோர்க்கே!

ஆரம் தாழ்ந்த அழகுமிக்க மார்பும், முழந்தாள்வரை நீண்ட கைகளும் உடையவனே பேரழகு வாய்ந்த சிறப்பு மிக்க வழுதியே! யாவருக்கும் உவப்புடன் வழங்கி மகிழ்வதிலே நீ மிகவும் வல்லவன்; என்றும் பொய்ம்மையைக் கொள்ளாதவன். கடலிலிருந்து எழுகின்ற ஞாயிற்றைப் போன்ற வெம்மையுடன் நின் பகைவர் மீது சினந்து எழுபவன்! எனினும், எம் போல்பவர்க்கோ திங்களைப் போன்று குளிர்ந்த அருளைப் பொழியும் இயல்பும் உடையவன். வாழ்க நீ, பெருமானே!

60. மதியும் குடையும்!

பாடியவர்: உறையூர் மருத்துவன் தாமோதரனார். பாடப்பட்டோன்: சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமா வளவன். திணை: பாடாண். துறை: குடை மங்கலம். - ('உவாமதியைக் கண்டு வளவனின் வெண்கொற்றக் குடை புறப்பட்டதெனக் கருதித் தொழுதேம் என்று கூறுதலால், குடை மங்கலம் ஆயிற்று) - -