பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

புறநானூறு - மூலமும் உரையும்


கொடுமை! எனினும், அறப்போர் புரிந்தீர்! ஆதலின், மேல் உலகத்தோர் விருந்தினர் வந்து நிரம்பினர் என மிகவும் மகிழ்ந்தனர். நும் புகழ் இவ்வுலகிற் சிறந்து என்றும் விளங்குவதாக!

சொற்பொருள்: 4, அனந்தல் - மந்தமான ஓசை, பறை கொட்டுவார் கை புண்படுதலின் மந்தமாக ஒலித்தல். பறைச்சீர் - பறைக்குரிய தாளம், 9. முரைசு: இடைப்போலி. 10. வேறுபடு பைஞ்ஞீலம் - பதினெண் பாடை மாக்களாலாகிய படைத் தொகுதி. 14. பாசடகு - பச்சையிலை; வெற்றிலை பாக்கு.

63. என்னாவது கொல்?

பாடியவர்:பரணர். பாடப்பட்டோர்: சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளி; சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் குறிப்பு: இருவரும் பொருது களத்தில் வீழ்ந்தபோது பாடியது. திணை: தும்பை. துறை: தொகை நிலை

("வேந்தரும் பொருது களத்து ஒழிந்தனர். இனியே கழனி, தானே என்னாவது கொல்?’ என, இருவரும் பட்டுவீழ்ந்த தொகைநிலை கூறி இரங்கினது)

எனைப்பல் யானையும் அம்பொடு துளங்கி, விளைக்கும் வினையின்றிப் படைஒழிந் தனவே; விறற்புகழ் மாண்ட புரவி எல்லாம் - மறத்தகைமைந்தரொடு ஆண்டுப்பட்டனவே தேர்தர வந்த சான்றோர் எல்லாம் 5

தோல் கண் மறைப்ப, ஒருங்கு மாய்ந்தனரே, விசித்துவினை மாண்ட மயிர்க்கண் முரசம், பொறுக்குநர் இன்மையின், இருந்துவிளிந் தனவே; சாந்தமை மார்பின் நெடுவேல் பாய்ந்தென, வேந்தரும் பொருது, களத்து ஒழிந்தனர்; இனியே, 10

என்னா வதுகொல் தானே! கழனி ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர் பாசவல் முக்கித், தண்புனல் பாயும்,

யாணர் அறாஅ வைப்பின் காமர் கிடக்கை அவர் அகன்றலை நாடே! 15

யானைப்படை முழுவதும் அம்புபட்டு வீழ்ந்தன. குதிரைப் படைகள் தம் வீரருடன் ஒருசேரக் களத்திலே வீழ்ந்தன. தேர் கொண்டு வந்தவரெல்லாம் ஒருசேரப் பட்டனர். முரசங்கள், முழங்குவோர் இல்லாததால், இருந்தும் ஒலியின்றிக் கெட்டன. சாந்து விளங்கிய தம் மார்பிலே வேல்பாய, இருபெரு வேந்தரும், அந்தோ, வீழ்ந்து மாய்ந்தனர்! ஆம்பல் தண்டால் வளைசெய்து அணிந்த கையினரான மகளிர், செவ்விய அவலைத் தின்று