பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

μωμπάααθεά 87

குளிர்நீர் பாய்ந்தாடும் புது வருவாய் மிக்க ஊர்களையுடைய நும் இருவர் பெருநாடும், இனி என்ன வருத்தம்தான் அடையக் கூடுமோ? பொறுக்கலாற்றாத் துயர்தான் இதோ வந்துவிட்டதே!

சொற்பொருள்: 5. தேர்தரவந்த தேர் கொடுதர வந்த, சான்றோர் - போரிடற்கு அமைந்தோர்; அறப்போர் செய்தற்குரிய பண்புகளால் அமைந்தோர் ஆகலின் சான்றோர் எனப்பட்டனர். 6. தோல்கண் மறைப்ப - பிடித்த பரிசை தம் கண் மறைப்ப. 7. மயிர்க்கண் முரசம் - மயிர் சீவாது தோல் போர்க்கப்பட்ட கண்ணையுடைய முரசம். 13. முக்கி - உண்டு.

64. புற்கை நீத்து வரலாம்!

பாடியவர்: நெடும்பல்லியத்தனார். பாடப்பட்டோன்: பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி, திணை: பாடாண். துறை: விறலியாற்றுப்படை

('விறலி. செல்லாமோ என்றமையின் விறலியாற்றுப் படை ஆயிற்று) .

நல்யாழ், ஆகுளி, பதலையொடு சுருக்கிச், செல்லா மோதில், சில்வளை விறலி! களிற்றுக்கணம் பொருத கண்ணகன் பறந்தலை, விசும்புஆடு எருவை பசுந்தடி தடுப்பப், பகைப்புலம் மரீஇய தகைப்பெருஞ் சிறப்பின் 5 குடுமிக் கோமாற் கண்டு, - நெடுநீர்ப் புற்கை நீத்தனம் வரற்கே!

ஒரு சில வளைகளே அணிந்தவளான விறலியே! யானை அணி பொருத இடம்அகன்ற பாசறை இடத்தே, வானத்துப் பறக்கும் பறவைக் கூட்டத்தைத் தடுத்துத் தம்பால் ஈர்க்கும் அளவுக்கு ஊன் துண்டங்கள் சிதறுமாறு, மாற்றார் தேசத்தின் கண்ணே கடும்போரிட்டு வெற்றி பெற்ற, பெருஞ்செல்வத்தை உட்ைய முதுகுடுமியாகிய கோமானைச் சென்று காணலாம், வருவாயாக கண்டால், நீர் பெருகிக் கஞ்சியுண்டு வாழும் இவ் வாழ்வை நாம் அறவே விட்டுவிடலாம். யாழையும் பறையையும் கட்டி எடுத்துக் கொண்டு உடனே புறப்படுவாயாக!

சொற்பொருள்: 1. ஆகுளி - சிறுபறை, பதலை - ஒரு தலை மாக்கிணை; ஒரு பக்கம் மட்டில் அடித்து ஒசையுண்டாக்கும் இடம் அமைந்த முழவு, 3. பறந்தலை - பாசறை.4. பசுந்தடி - பசுமையாகிய ஊன்; தடுத்தலாவது எருவையை மேலே பறந்து செல்லாமல் தடுப்பதாம். 7. புற்கை - புல்லிய சோற்றுக் கஞ்சி.