பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

புறநானூற்றுச் சிறு கதைகள்


“என்ன அம்மா?”

“அதோ தெருவில் போகின்ற தேரில் பார்த்தாயா?.”

“பார்த்தேன்! பார்த்தேன்! பார்க்காமல் என்ன? அவர்தான் சோழ மன்னர் போர்வைக் கோப்பெருநற் கிள்ளி”

“என்ன, சோழ மன்னரா இவர்?”

“அதற்குச் சந்தேகம் என்ன அம்மா? நம் நகரத்தின்மேல் படையெடுத்து வந்திருக்கும் சோழ மன்னர்தான் இவர்.”

அவள் கண்கள் தேரைவிட்டு அகலவே இல்லை.ஆனால் அவள் காணவேண்டும் என்பதற்காகத் தேர் நின்று கொண்டிருக்குமா என்ன? சாளரத்திலிருந்து காண முடிந்த பார்வை எல்லையைக் கடந்து சென்றுவிட்டது தேர்.

தேர் மட்டுமா போயிற்று? அந்தத் தேரில் இருந்தவனோடு அவள் உள்ளமும் ஏறிக் கொண்டுபோய் விட்டதே? நக்கண்ணை கன்னிமாடத்தில் வசித்து வருகிறவள். இதுவரை ஆண்களையே கண்ணால் காணாமலிருந்தவள்; அவள் இதயம்.? பாவம் அது அந்தத் தேர்மேலிருந்த அழகுக்குத் தோற்றுச் சரணாகதி அடைந்துவிட்டது.

“தோழி! ஆண்களில் இப்படி அழகுள்ளவர்.”

“வேறெங்கும் இல்லை அம்மா” - அவள் தொடங்கிய வாக்கியத்தைத் தோழி முடித்தாள்.

படைகள் எல்லாம் சென்றுவிட்டன. தெரு பழைய அமைதியை அடைந்துவிட்டது. சூன்ரியம் திகழும் வீதியை வெறித்துப் பார்த்தாள் நக்கண்ணை.

“அம்மா! இனிமேல் இந்த நகரத்தின் நிலை மதில்மேற் பூனைபோலத் திண்டாட்டம்தான்!”

“ஏன் அப்படி?”

“நம்முடைய அரசராகிய ‘ஆமூர்மல்லர்’ வெல்வாரா? சோழன் வெல்வானா? நம் அரசனுக்கு வெற்றி கிடைத்தால்