பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன்- உழிஞைப் ULు 95 குளிறு முரசினான் கொண்டான் அரணம் களிறுங் கதவிறப்பாய்ந்த-ஒளிறும் அயிற்றுப்படைந்த அணியெழு வெல்லாம் எயிற்றுப் படையால் இடந்து. 107 அதிரும் வீரமுரசினை உடையான் அரணினை வென்று கைப்பற்றினான்; அப்போது அவனுடைய போர் யானைகளும், விளங்காநின்ற வேலினது வலிமையைப் பெற்ற, நிரைத்த கணையம் முழுவதையும், தமது கொம்புகளான படைக் கருவிகளாலே பெயர்த்து, அவ்வரணிடத்து வாயிற் கதவுகள் ஒடிந்து வீழுமாறு சினத்துடன் பாய்ந்தன. - குளிறுதல்-முழங்குதல் அரணம் கொண்டான்' என்றது, எயிற்புறத்தாரான நொச்சிமறவரை வென்று, அரண்வாயிலை அடைந்தான் என்பதாம்.குளிறும் முரசினான் என்றது, உழிஞை வேந்தனை செயல் முற்றுப் பெறாது, அரணை அணுகுமளவே குறுவெற்றி பெற்றதனால், குற்றுழிஞை ஆயிற்று. - 13. குற்றுழிஞை-2 வளைஞரல் வயிரார்ப்ப மிளைகடத்தலும் அத்துறையாகும். வீரசங்கம் முழங்கவும், கொம்புகள் ஆரவாரிப்பவும், காவற்காட்டைக் கடந்து புகுதலும், குற்றுழிஞை என்னும் அத் துறையேயாகும். - - அந்தாந்தோயும் அமையோங் கருமிளை மைந்தர் மறிய மறங்கடந்து - பைந்தார் விரைமார்பின் வின்னரல் வெங்கனை துவார் - வரைமார்பின் வைகின வாள். 108 உழிஞை வீரருடைய வாள்கள், வானத்தைத் தொடுகின்றவான மூங்கில்கள் உயர்ந்த, கடத்தற்கரிய காவற் காட்டின்கண் நின்று போரிடும் நொச்சிமறவர் முதுகிடும்படி, அவரது மறத்தினை வென்று, பசிய மாலையினது மணத்தை யுடைய தமது மார்பிடத்தே வில்நாண் ஒலிக்கும்படியாக வெவ்விய அம்பினைத் துவும், அந் நொச்சிமறவருடைய மலைபோன்ற மார்புகளிலேயும் தங்காநின்றன. - - மைந்தர்-மைந்தினை உடையோர், வீரர். உழிஞையாரின் எண்ணம் குறுக இந்த அழிவு நேரிடலால், இது குற்றுழிஞை ஆயிற்று. - -