பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் - நம்படைமறவர்கள் அரணிடத்துள்ளே இறங்கியபின்னரும், நெறிப்புமிகுந்த நெடிய மதிலிடத்துள்ளே இருந்த பகைவரான நொச்சியார், தாம் தோற்றொழிதலை அறியாராயினர்; கிளியை யொத்த பேச்சினையுடைய மகளிரது, மான்மறியினது போன்ற ஒளியுடைய கண்ணோக்கிலே களிப்புக் கொள்ளும் காமவேட்கைபோன்று, தம் மனத்தே போர்வேட்கை விரவுதலின், எதிர்த்துப் போரிடுவாரும் ஆயினர்! இது உழிஞை மறவருள் ஒருவன், நொச்சியாரது வலியழிந்த தன்மைநோக்கியும், அப்போதும் அவர் போரிடும் மாறுபாட்டை வியந்தும் கூறியது. இதனால் அவரை வெல்லும் உழிஞையாரது மறமாண்பும் உரைக்கப்பட்டது. நெறி-நெறிப்பு அடுக்கு அடுக்காக ஒன்றுளொன்று விளங்கும் தன்மை, - 21. அகத்து உழிஞை முரண் அவியச் சினஞ் சிறந்தோர் அரண் அகத்தோரை அமர்வென்றன்று. சினமிகுந்தாரான உழிஞை மறவர்கள், நொச்சியாரது மாறுபாடு கெட அரணகத்தே இருந்த அவரைப் போரிடத்தே வென்றது, அகத்து உழிஞை ஆகும். - - o - 'முரண் அவிய' என்பது, உழிஞையார்க்கும் பொருந்தும் வெற்றியால் தம் மாறுபாடு கெட இவரும் விளங்குதலால், *, « - செங்கண் மறவர் சினஞ்சொரிவாள் சென்றியங்க அங்கண் விசும்பின் அணிதிகழும்-திங்கள் முகத்தார் அலற முகிலுரிஞ்சுஞ் சூழி - அகத்தாரை வென்றார் அமர். - 116 சினத்தாற் சிவப்புற்ற கண்ணினரான உழிஞை மறவர்கள், செற்றத்தைப் பொழிகின்ற வாள் போய்ப் பகை மறவரிடையே உலவ, அழகிய இடத்தையுடைய வானகத்தின் கண் அழகாக விளங்கும் நிலவனைய முகத்தாரான மகளிர் அலறிக் கூச்சலிடும்படியாக, முகில்கள் தவழும் உச்சிகளையுடைய அரணின் உள்ளிருந்த நொச்சிமறவரைப், போரிலே வென்றனர். அங்கண் விசும்பின் அணிதிகழும் திங்கள் முகத்தார் என்றது நொச்சியாரது மகளிரை அவர் அலறுதல். நொச்சியார் பட்டு வீழ்ந்த கொடுமையைக் கண்டதனால், - 22. முற்று முதிர்வு அகத்தோன் காலை அதிர்முர சியம்பப் புறத்தோன் வெஞ்சினப் பொலிவுரைத் தன்று.