பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் 'மறங்கால” என்பதற்கு மறப்பண்பு ஒளிவீச என்றும் பொருளுரைக்கலாம்.கால என்பதற்குக் கைவிடஎனப்பொருள் கொண்டு, மறங்கால என்பதனை நொச்சியார் மேல் ஏற்றுவார் சிலர். - ஒன்றியவர்நா டொருவழித்தாய்க் கூக்கேட்ப வென்றி விளையா விழுமதிலோர்-என்றும் பருந்தார் செருமலையப் பாடி பெயரா திருந்தான் இகன்மறவரேறு. - 125 மாறுபாட்டாற் சிறந்த மறவரேறான உழிஞை வேந்தன், தன்னொடும் பொருந்திய பகைவரது நாடெல்லாம் ஒருவழிப்பட்டுத் தனது ஏவலைக் கேட்குமாறும், வெற்றியினைத் தங்கள் பங்கிற்கு விளைக்கமாட்டாத சிறந்த மதிலிடத்தோர், என்றும் பருந்துகள் நிறையும் பூசலைச் செய்ய, அதனைத் தடுக்குமாறும், தன் பாடிவீட்டினின்றும் பெயராதவனாக, அவ்விருப்பிலேயே மேலும் இருந்தான். - - பகைவர் அடிப்படவும், உழிஞையான் மேலும் அவர் போர் மலைதல் கூடுமெனக் கருதிப் பாடி பெயராது இருந்தான்' என்றலால், அடிப்பட இருத்தல் ஆயிற்று. 31. தொகை நிலை எம்மதிலின் இகல்வேந்தரும் அம்மதிலின் அடியடைந்தன்று. தோற்று வீழ்ந்த இந்த மதிலினை உடையான் அல்லாமல், பிற எவ்வகைப்பட்ட மதிலின்கண் இருந்தோரான பகைவேந்தரும், அந்த மதிலினிடத்தே வந்து உழிஞை வேந்தனின் அடிகளை அடைந்தது, தொகைநிலை ஆகும். - ஏனையோர் வந்து அடியடைதல், தமக்கும் அத்தகைய அழிபாடு வந்துறாமற் பொருட்டு. இதனால், உழிஞையானின் போர்மறமாண்பினது உயர்ச்சியும், தொகையாக மன்னர் பலரும் பணிந்த தொகைநிலையும் புலனாகும். - நாவல் பெயரிய ஞாலத் தடியடைந் தேவ லெதிரா திகல்புரிந்த-காவலர் வின்னின்ற தானை விறல்வெய்யோற் கம்மதிலின் முன்னின் றவிந்தார் முரண். 126 வில்லாற்றல் நிலைபெற்ற படைப்பெருக்கை உடையோனாயிருந்த வெற்றிவிருப்பினனாக உழிஞை வேந்தனுக்கு, நாவலம் பொழில் என்னும் பெயருடையதான இந்த