பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் இங்ங்னம் கருதித் தும்பை வேந்தன், போர் நிகழுதலை விலக்கினான். போர் நிகழின் பல்லுயிரும் இறந்து பாழ்படும் என்பது கருத்து. இஃதன்றி, ஒருவன் படைஞரே தம்முள் மாறுபட்டுப் பொருதல் உரைபழுதாம் செயல் எனவும் கூறுவர். 3. தானை மறம் - 2 பூம்பொழிற் புறங்காவலனை - ஒம்படுத்தற்கும் உரித்தெனமொழிப. பொலிவுபெற்ற நாடுகாவலனாகிய அரசனுக்கு, உறுதிப் பொருளினை எடுத்துக் கூறிய, போரினைக் காலங் கடத்தலை விலக்குதற்கும்,இந்தத்தானைமறத்துறை உரியதென்று ஆன்றோர் கூறுவர். - வயிர்மேல் வளைஞரல வைவேலும் வாளும் செயிர்மேற் கனல்விளைப்பச் சீறி - உயிர்மேற் பலகழியுமேனும் பரிமான்தேர் மன்னர்க்கு - உலகழியும் ஓர்த்துச் செயின். . . . 130 கொம்புகளின் ஒசையின்மேற் சங்குகளின் முழக்கம் எழக், கூர்த்தவேலும் வாளும் போரிடத்து நெருப்புப் பரக்க வெகுண்டு போரிட்ட விடத்து, உயிர்கள் மேலும் பலவாகக் கழிந்து போகுமேனும், குதிரைபூட்டிய தேரினை உடையவனரான மன்னருக்குக், காலந்தாழ்ப்ப ஆராய்ந்து செய்யின், அதனால் பூமியே அழிவினை அடைதலும் நேரும். - 'உயிர் மேற்பல கழியுமேனும் அதனைக் கருதிக் காலந் தாழ்க்காது, போரினை உடனே செய்தல் வேண்டும்’ என அமைச்சர் படைத்தலைவர் ஆயினார் கூறுவர் இது. அதனையும் கருதாது முற்படும் மறத்தொழிலால் இதுவும், தானை மறம் ஆயிற்று. - - 4. தானை மறம் - 3 வேற்றானை மறங்கூறி மாற்றாரதழியிரங்கினும் ஆற்றின் உணரின் அத்துறை யாகும். முறையாக ஆராய்ந்து உணர்வோமானால்,வேற்படையினது மறமாண்பினை எடுத்துக் கூறி, அதனால் வந்துறுகிற பகைவருடைய கேட்டிற்கு இரங்கினாலும், அதுவும் தானை மறத் துறையே யாகும். - - - மின்னார் சினஞ்சொரிவேன் மீளிக் கடற்றானை ஒன்னார் நடுங்க உலாய்நிமிரின்-என்னாங்கொல் ஆழித்தேர் வெல்புரவி அண்ணல் மதயானைப் பாழித்தோள் மன்னர் படை. - 131