பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் * ase; படலம் 121 17. பின்தேர்க் குரவை கருங்கழன் மறவரொடு வெள்வளை விறலியர் பெருந்தகை தேரின் பின்னா டின்று.

  • பெரிதான மேம்பாட்டினையுடைய தும்பையானது தேரின் பின்னாக, வலிய கழலணிந்த மறவரொடும், வெள்ளிய வளையணிந்த விறலியரும் குரவையாடிச் செல்வது, பின்தேர்க் குரவை ஆகும். - . .

வாகைத் திணையிலும், வெற்றி பெற்று வாகை சூடிச் செல்லும் வேந்தனது தேரின் பின்னாக இது நிகழும் (செய்.162) இரண்டின் வேறுபாட்டையும் உணர்க. கிளையாய்ந்து பண்ணிய கேள்வியாழ்ப்பானும் வளைய வயவரும் பின்னாக்-கொளையாய்ந்து அசைவிளங்கும் பாடலோ டாட வருமே திசைவிளங்கும் தானையான் தேர். - - 144 . . திசைகளிலே விளங்கும் தானைப் பெருக்கினை உடைய தும்பை வேந்தனது தேர், அதன் பின்பக்கத்தே, கிளை நரம்பினை ஆய்ந்தமைத்த சுருதியான் மிகுந்த யாழிசையை எழுப்பலிலே வல்ல பாண் மகளிரும், தோலாத வீரமறவரும், இசையாய்ந்து தூக்குதல் அமைந்த பாடலுடனே ஆடலையும் நிகழ்த்தியவராக வந்து கொண்டிருப்பவரும். - இது, தேர் வருவதனைக் கண்டார் கூறியது. தேரின் பின்னாகக் சுரவையாடி வருதலைக் கூறுதலின், பின்தேர்க் குரவை ஆயிற்று. - 18. பேய்க் குரவை மன்னன் ஊரும் மறமிகு மணித்தேர்ப் பின்னும் முன்னும் பேயாடின்று. - மன்னவன் செலுத்துகின்ற மறத்தன்மை மிகுந்த மணிகள் விளங்கும்தேரினது.பின்னும் முன்னுமாகப்பேய் ஆடியதுபேய்க் குரவை ஆகும். - - முன்தேர்க் குரவையும் பின்தேர்க் குரவையும் வயவரும். வயவரொடு விறலியரும் ஆடி வருவது; இது பேய்கள் ஆடி வருவது; அதனால், பேய்க் குரவை ஆயிற்று. முன்னரும் பின்னரும் மூரிக் கடற்றானை மன்னர் நெடுந்தேர் மறனேத்தி-ஒன்னார் நிணங்கொள்பேழ் வாய நிழல்போல் நுடங்கிக் கணங்கொள்பேய் ஆடும் களித்து. . 146 t