பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் 大 LDLు படலம் 123 வாளை பிறழுங் கயங்கடுப்ப வந்தடையார் ஆளமர் வென்றி யடுகளத்துத் - தோள்பெயராக் காய்ந்தடு துப்பிற் கழன்மறவர் ஆடினார் வேந்தொடு வேள்வாள் விதிர்த்து. 147 வெகுண்டு கெர்ல்லும் வலியினையுடைய, கழலணிந் தோரான தும்பை மறவர்கள், தம் அரசனைப் பணிந்து வந்து சேராதாரின் வீரர்கள் மேவும், வெற்றியிடையுடைய கொலைக் களத்தின்கண், அரசனுடனே விளர்த்த வாளினை அசைத்தவராக ஆடாநின்றனர்! அது, வாளை மீன் மிளிருகின்ற மடுவினை ஒப்பத் தோன்றியது! வாளை விதிர்த்து ஆடுதல், வாளைமீன் கயத்திடத்தே பிறழ்தல் போலத் தோன்றிற்று என்க. அரசன் என்றது தும்பை வேந்தனை. ஒள்வாள் உயர்த்து ஆடலின், ஒள்வாள் அமலை என்றனர். - 21. தானை நிலை இருபடையும் மறம் பழிச்சப் பொருகளத்துப் பொலிவெய்தின்று. இரண்டு சாராரின் படையும் மறத்தினை ஏத்தப், பொருகளத்தே, தும்பை மறவன் ஒருவன் சிறப்படைந்தது, தானை நிலை ஆகும். - - - - தானை மறத்திற்கும் தானை நிலைக்கும் இடையிலுள்ள ஒழுக்க வேறுபாடுகளை அறிதல் வேண்டும். - நேரார் படையின் நிலைமை நெடுந்தகை ஒரான் உறைகழியான் ஒள்வாளும்-தேரார்க்கும் வெம்பரிமா ஊர்ந்தார்க்கும் வெல்களிற்றின் மேலார்க்கும் கம்பமா நின்றான் களத்து. 148 பெரிய மேம்பாட்டினை உடையவனான மறவன், பகைவரது தானையின் வலிமையது நிலையினையும் விசாரித்து அறிய மாட்டான். தன் ஒளிசிறந்த வாளினையும் உறையிடத்தினின்றும் வாங்கமாட்டான், தேர் வீரர்க்கும், வெய்ய செலவினை யுடைய குதிரையைச் செலுத்தினார்க்கும், வெல்லும் களிற்றின் மேலார்க்கும், நிலைத்துண் போலக் களத்திலே உரத்துடன் நின்றான்! - - கம்பம்-நிலைத்தூண் நடுக்கமும் ஆம். அப்போது பகைவரது நால்வகைப் படையினருக்கும் நடுக்கத்தை விளைவிப்பவனாக மறச்செயலாற்றி அவரைத் தடுத்து நின்றான் என்க.