பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விக் கேசிகன் k வாகைப் படலம் 149 - பரந்த புகழினை உடையானது ஒப்பிலாத வெண்கொற்றக் குடைக்கு, வானமே போர்வையாம்; விளங்கா நின்ற கதிரே மேல் வட்டமாம், நீர்த்தாரையை எதிரே சொரியும் மேகமே இடைவிட்ட சுற்றுத் தாமமாம்; சந்திரா சித்தர் வழங்கும் மேரு மலையே காம்பாம்! இடைபோழ்ந்து கற்றிக் கதிர்வழங்கு மாமலைக் காம்பு என்று பாடமோதி, மாகத்தைப் பிளந்து சுற்றிக் கதிர் வழங்கு மாமலை காம்பு’ என்பாரும் உளர். மாகம்-வானம், இதனாற் கொற்றக் குடைநிழலுள், உலகெலாம் அடங்கிற்று என, அதனியல்பு சிறப்பித்துக் கூறியதும் ஆயிற்று. - 28. கண்படை நிலை மண்கொண்டமறவேந்தன் கண்படைநிலை மலிந்தன்று. பகைவரை வென்று, அவரது பூமியைக் கைக்கொண்ட மறமாண்புடைய வேந்தனது, உறக்கச் செவ்வியை மிகுத்து உரைத்தது, கண்படை நிலை ஆகும். - . கொங்கலர்தார் மன்னரும் கூட்டளப்பக் கூற்றணங்கும் வெங்கதிர்வேல் தண்தெரியல் வேந்தற்குப்-பொங்கும் புனலாடையாளும் புனைகுடைக்கீழ் வைகக் - கனலாதுயிலேற்ற கண். - 183 இயமனை வருத்தும் வெய்ய ஒளிர்வேலினையும், குளிர்ந்த மாலையினையும் உடைய வேந்தனுக்குத், திறைகொடாத மதுமலர்ந்த மாலையினையுடைய வேந்தர்களும் அடங்கித் திறையளப்பப் பொங்கும் கடலாகிய ஆடையை உடுத்தாளான நிலமகளும் ஒப்பனை சிறந்த கொற்றக் குடையின் கீழாகத் தங்கக், கண்களும் அழலாவாய் உறக்கத்தை எதிர்ந்தன! கூட்டு-திறைப் பொருள். பகை ஒழிந்ததனால், கண்கள் கனலாவாய்த் துயிலேற்றன எனக் கண்படுதலின் இயல்பைக் கூறினார். - - - 29. அவிப்பலி வெள்வாள் அமருள் - செஞ்சோறல்லது உள்ளாமைந்தர் உயிர்ப்பலி கொடுத்தன்று .” தெளிந்தவாட்பூசலிடத்தே,செஞ்சோற்றுக் கடனை யன்றிப் பிறிதினை நினையாத ஆண்மையாளர்கள், தம் உயிரைப் பலியாகக் கொடுத்தது, அவிப்பலி ஆகும்.