பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன்- வாகைப்படலம் 153 நிலையெனவும், உலகியலுள் நின்றே காமத்தைக் கைவிட்ட நிலையெனவும் அது இருபகுதிப்பட இயலுவதும் அறிக. கயக்கிய நோய்வாய்க் கையிகந்து நம்மை இயக்கிய யாக்கை இருமுன்-மயக்கிய பட்படா வைகும் பயன்ஞால நீள்வலை உட்படாம்போதல் உறும். - 188 நம்மைக் கலக்கிய நோவுகளை உடையவாய்க் கை கடந்து நம்மை நடத்திய உடலானது இற்றுப் போவதற்கு முன்பாகவே, மருளப்பண்ணின குணம் அடுத்துத் தங்கும் பயனாகிய உலகமென்னும் நெடிய வலையுள்ளே அகப்படேமாகி,நன்னெறிக் கண்ணே சென்று சேர்தல், உயிருக்கு உறுதியுடைத்தாம். இதுவும் வாழ்விற் சிறந்த வெற்றிப்பாடே ஆதலால், வாகைத்திணை ஆயிற்று. பண்புபட்பு என விகாரமாயிற்று. தொகுத்து உரைத்தல் வாகையாகிய வெற்றி மேம்பாட்டினை உரைக்கின்ற இந்தப் படலமானது, வாகை மாலையினைச் சூடிப் பகைவரை அழித்து வென்று சிற்ப்பது எனவும்,இயல்பினதுமிகுதிப்பாட்டைக்கூறும் முல்லைப்பகுதி எனவும் அமைவதனைக் கண்டோம். இவற்றின் துறையமைதிகளான முப்பத்திரண்டு பகுதிகளையும் அறிந்தோம்.

  • அவை: -

பகைவரை வென்று வாகைமாலை சூடுதலாகிய வாகை அரவம், வாய்மொழி நடுநிலை தவறாத மன்னனது இயல்பினை உரைத்தலான அரசவாகை, பலிபெறு முரசின் பண்பினைக் கூறுதலான முரசவாகை, போர்க்களச் செயலாண்மையினை உழவோடு ஒப்புக்காட்டி உரைத்தலாகிய மறக்களவழி: பேய்கள் உண்டுகளிக்க வேட்ட களவேள்வி; தேர்த்தட்டின் முன்பாகப் பேய்கள் ஆடுதலான் முன்தேர்க் குரவை, நேரின் பின்னாக மறவரும் பாணிச்சியரும் ஆடுதலான் பின் தேர்க் குரவை, மறைக் கேள்வியால் மாண்புற்ற பார்ப்பனன் வேள்வியாற் சிறப்புற்றது கூறலாகிய பார்ப்பன வாகை வணிகனின் அறுதொழில் மாண்பினை எடுத்துரைக்கும் வாணிக வாகை உழவனின் வெற்றி மேம்பாடு கூறலாகிய வேளாண் வாகை ஒப்பு நோக்கி இகழாமை கூறலாகிய பொருநவாகை முக்காலமும் நிகழ்பவற்றை அறிபவனின் சிறப்பினை உரைத்தலாகிய அறிவன் வாகை தவத்தாரது ஒழுக்க மேம்பாடு கூறலாகிய தாபத வாகை, கூதிர்க் காலத்துப் பிரிவாற்றாமையைப் பொறுத்துப் பாசறையிடத்தே இருத்தலாகிய கூதிர்ப் பாசறை, வாடை வருத்தியும் பாசறையிடத்தே இருத்தலாகிய வாடைப் பாசறை: