பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158. புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் குளிர்ந்த பூவால் தொடுத்த மாலையினையும், அழலும் சினத்தையுடைய வேற்படையினைத் தாங்கிய தானைவீரரையும் உடையவன் எம் கோமான். அவன், பகை அரசர்க்குச் சிங்கம் போன்றனன் மறையவர்களின் சொன்மாலையாகத் திகழ்பவன்; அன்னம்போலும் நடையினரான மகளிருக்குநிறைந்த அமுதமாக இருப்பவன்.தன்னை அடையும் பரிசிலர்களுக்கு மழையினைப் போல வழங்குபவன்! . . . . பாடாண் திணையின் துறைகள் - 1. வாயில் நிலை புரவலன் நெடுங்கடை குறுகிய என்னிலை கரவின்றுரையெனக் காவலற் குரைத்தது. புரவலனான நின் அரசனின் நெடிய வாயிலை அணுகிய என்னுடைய வரவினை, மறைவின்றி அவனிடம் சென்று சொல்வாயாக’ என்று, வாயிற்காவலனுக்கு உரைத்தது, வாயில் நிலை ஆகும். - - - சேய்வரல் வருத்தம் வீட வாயிற், காவலர்க் குரைத்த கடைநிலை என்பர் தொல்காப்பியர் - (புறத். சூ. 35). இது வாயிலோனுக்குக் கூறிற்றேனும் அவ் வருத்தம் தீர்க்கும் பாடாண் தலைவனதே துறையென்பதும் அறிதல் வேண்டும். இஃது உயர்ந்தோர்க்கு உரியது என்பதும், இழிந்தோர்க்குப் பரிசில் கடைஇயகடைக்கூட்டு நிலை உரிய தென்பதும் தொல்காப்பியக் கருத்தாகும் (புறத். சூ. 36). - - நாட்டிய வாய்மொழி நாப்புலவர் நல்லிசை ஈட்டிய சொல்லான் இவனென்று-காட்டிய காயலோங் கெஃகிமைக்கும் கண்ணார் கொடிமதில் வாயிலோய் வாயில் இசை, 190 செறுதல் தொழிலானே உயர்ந்த வேல் திகழும், கண்ணுக்கு நிறைந்த கொடிகளாற் பொலிவுற்றிருக்கும் மதிலினது வாயிலைக் காத்திருக்கும், வாயிற் காவலனே! பூமியின் கண் நிலைநிறுத்திய மெய்ம்மொழியினை உடைய நாவாற் சீர்சிறந்த அறிவினை யுடையவர்கள் புகழ்ந்த நினது நல்ல புகழினைப் பாடிய சொல்லினை யுடையவன் இவன்' என்று நின் அரசன்பால் என்னைக் காட்டுவான் வேண்டிச் சென்று, நான் வந்த வரலாற்றைச் சொல்வாயாக! - காயல்-காய்தல். காயலோங்கு எஃகிமைக்கும் வாயிலோய், கண்ணார் கொடிமதில் வாயிலோய் எனக் கூட்டுக. காட்டியவரவினை அறிவிக்கும் பொருட்டாக, வாயில் இசை-வந்த வரலாற்றைச் சொல் வாயில்-வரலாறு. - . .