பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. 162 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் . . . கொடை ஒம்பான் என்றது. கொடுத்தலை வேறு எதனைக் கருதியும் கைவிடுதல் இலன் என்பதாம். கதம்-சினம்; காற்றும். காலச்செய்யும் கைவிடச் செய்யும்.வேலான்-வெற்றிவேலினை உடையான். - . . - 7. கண்படை நிலை நெடுந்தேர்த்தானை நீறுபட நடக்கும் கடுந்தேர் மன்னவன் கண்படை மலிந்தன்று. நெடிய தேர்களான் மிக்க பகைப்படை பொடிபடுமாறு செல்லுகின்ற, கடுந் தேரினையுடையவனான மன்னவனது துயிலினை மிகுத்தது. கண்படைநிலை ஆகும். - வாகைத் திணைக்கண் வருகின்ற கண்படை நிலையினையும் இதனோடு ஒப்பிட்டுக் காண்க. (வெண்பா 183) இதனைக் 'கண்படை கண்ணிய கண்படை நிலை என்பர் தொல்காப்பியர் (புறத். சூ. 35) 'கண்படை கண்ணிய என்றார். கண்படைதற்கு அரசரும் அரசரைப் போல்வாரும் அவைக்கண் நெடிது வைகியபழி மருத்துவரும் அமைச்சரும் முதலியோர் அவர்க்குக் கண்துயில் கோடலைக் கருதிக் கூறியது இது. இங்ங்னம் இதனை விளக்குவர் நச்சினார்க்கினியர் மேலார் இறையமருள் மின்னார் சினஞ்சொரியும் வேலாண் விறல்முனை வென்றடக்கிக் - கோலாற். கொடிய உலகிற் குறுகாமை எங்கோன் - கடியத் துயிலேற்ற கண். - 196 - எம்முடைய அரசன், வீரர்கள் தங்கிய போரிடத்து, ஒளிநிறைந்து சினத்தைச் சொரிகின்ற வேலினாலே, வலிய பூசலினை வென்றுஅடக்கியும்,செங்கோன்மையால் கொடியவை ஏதும் உலகில் எய்தாதபடி நீக்கிக் காத்தும் செயலாற்றியமை யானே, இப்போது அவன் கண்களும் துயிலினை மேவிய வாயின. அவை இரண்டும் நிறைவேறாவழி அவன் கண்ணும் உறங்காது என்பதும் இது. மேலார்-வீரர். இறைத்தல்-தங்குதல். - 8. துயிலெடை நிலை அடுதிறல் மன்னரை அருளிய எழுகெனத் தொடுகழல் மன்னனைத்துயிலெடுப் பின்று. - கட்டுங் கழலினையுடைய தம் வேந்தனை, கொல்லும் வலியுடைய பிற வேந்தர்க்கு அருள்செய்யும் பொருட்டாக எழுக’ என்று கூறித்துயில் நீங்கியது, துயிலெடைநிலை ஆகும்.