பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ho®¡ïë Gøåðåì * UFLIGIuLøb 169 - அவள் விரும்பாளாயது, கள்ளிற்கு விலையாகக் களிறுகளைத் தந்தோர் முன்னும் பலராக இருந்ததனால், இதனால், களத்தே கைப்பற்றிய செல்வமிகுதியும் விளங்கும். 19. வீற்றினிதிருந்த பெருமங்கலம் கூற்றிருந்த கொலைவேலான் வீற்றிருந்த விறல்மிகுத் தன்று. கூற்றுவன் குடியிருந்ததனை ஒத்த கொலைவேலினை உடையோனான தம் வேந்தன், செம்மாப்புடன் வீற்றிருந்த அந்த வெற்றிச்செவ்வியைச் சிறப்பித்தது, வீற்றினிதிருந்த பெருமங்கலம் ஆகும். - அழலவிர் பைங்கண் அரிமான் அமளி நிழலவிர்பூண் மன்னர்நின்றேத்தக்-கழல்புனைந்து வீமலிதார் மன்னவனாய் வீற்றிருந்தான் வீங்கொலிநீர்ப் பூமலி நாவற் பொழிற்கு. - 208 - முழங்கும், ஆரவாரத்தான் மிகுந்த கடலாற். சூழப்பட்டிருக்கும், இந்தப்பொலிவுநிறைந்த நாவலம் பொழில் என்னும் பூமி முழுமைக்கும், வீரக்கழலினைக் கட்டியவனும் மலர்மிக்க மாலையணிந்தவனுமாகிய மன்னவனாகித் தழல் ஒளிரும் பசுங்கண்ணினாற்சிறந்த சிங்கஞ்சுமந்த அணையின் மேலே, நிழலிலங்கும் பூணணிந்த மன்னவர் பலரும் நின்று தன்னை வாழ்த்த, எம் வேந்தன் செம்மாந் திருந்தான். தங்கள் மன்னன் பகையொழித்த வெற்றியாளனாகச் செம்மாந்து வீற்றிருந்த சிறப்பினைக் கூறி வாழ்த்தியது இது. வீற்றிருந்த நிலையே இங்கு வாழ்த்துக்கு உரியதாதலைக் கவனிக்க வேண்டும். - 20. குடுமி களைந்த புகழ்சாற்று நிலை நெடுமதில் எறிந்து நிரைதார் மன்னன் . குடுமி களைந்த மலிவுரைத் தன்று. - நிரைத்த மாலையினையுடைய வேந்தன், பகையரசரது நீண்ட அரணினை அழித்து, அவரது குடுமியைக் களைந்த மிகுதியைச் சொல்லியது, குடுமி களைந்த புகழ்சாற்று நிலை ஆகும். பகைவரது குடுமியைக் களைதல், அவரது செருக்கினை . . . . ஒழித்தற்கு சிகையைக் களைதல் எனவும், மணிமுடியை அகற்றுதல் எனவும் இதனைக் கொள்வர். குடுமிகளைந்த என்பதற்கு, மயிர்ச் சிகையைக் கூட்டி முடித்தல்' எனப் பழைய உரையாசிரியர் உரைப்பர். . - மன்னெயில் அழித்த மண்ணுமங்கலமும் (புறத். சூ.36)