பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 . . . புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் நின்ற புகழொடு நீடுவாழ் கிவ்வுலகில் ஒன்ற உயிர்களிப்ப ஓம்பலால்-வென்றமருள் வாள்வினை நீக்கி வருக விருந்தென்னும் ஆள்வினை வேள்வியவன். - - 215 போரிடத்தே எதிரிட்ட பகைவரை வென்று, தன்னுடைய வாள்வினையாகிய செயலினை முடித்த பின்னர், வருக . . விருந்தினர்' என்று சொல்லாநின்ற முயற்சியாற் செய்யும் வேள்வியினை உடையவனாயினான். எம் மன்னன். அவன், இவ்வுலகில், ஒருசேர எல்லா உயிர்களும் மகிழும்படியாகக் காத்துவருதலால், நிலைபெற்ற புகழினொடு கூடியவனாக நெடுங்காலம் வாழ்வானாக o - - வாள்வினை ஆள்வினை என்ற இருவகை முயற்சிகளின் - சிறப்பினையும் ஆய்ந்து அறிக. அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை ஆதலால், அதனை ஆற்றுதல் ஆள்வினை என்று சிறப்பிக்கப்பட்டது. - - - 27. பாணாற்றுப்படை சேணோங்கிய வரையதரிற் பாணனை ஆற்றுப்படுத்தன்று. மிகவும் உயர்ந்த மலைவழியிடத்துப் பாணனை அவன் செல்லற்கான வழியிலே செலுத்தியது. பாணாற்றுப்படை ஆகும். பரிசில் நாடிச் செல்லுமவனைப் பெற்றுவரும் பாணன், ஒருவன் வழியிடைக் கண்டு, தனக்கு அளித்த வள்ளலிடத்தே செல்லுமாறு ஆற்றுப்படுத்தியது இதுவாகும்.கூத்தரும்பாணரும் பொருநரும் விறலியும், பெற்ற பெருவளம் பெற்ாஅர்க்கு அறிவுறீஇச், சென்று பயன் எதிரச் சொன்ன பக்கமும்’ என்ற தொல்காப்பியச் சூத்திரத்தையும் காண்க. (தொ. புறத். சூ.36) அச் செய்யுள்களைக் கூத்தராற்றுப் படை, பாணாற்றுப்பட்ை, பொருநராற்றுப்படை விறலியாற்றுப்படை, முருகாற்றுப்படை என வழங்குதலும், ஆற்றின் அருமையும், அவனுர்ப் பண்பு முதலியனவும் கூறுதலும் அறிக - இன்றொடை நல்லிசையாழ்ப்பான எம்மைப்போற் கன்றுடைவேழத்த கான்கடந்து-சென்றடையிற் காமரு சாயலாள் கேள்வன் கயமலராத் தாமரை சென்னி தரும். 216. இனிய கோவையினை யுடைய நல்லிசையான் மலிந்த, யாழ்வல்ல பாணனே! எம்மைப்போன்றே, கன்றுடை யானைகளைக் கொண்ட காட்டினைக் கடந்து சென்று நீயும் பொருந்தினால், அழகு மருவின சாயலினை உடையாளின், ماري