பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன்-பாடாண்படலம் 185 பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச், சென்ற பயன் எதிரச் சொன்ன பக்கமும் என்னுஞ் சூத்திர உரையுள் (புறத். சூ.36), தான் இறைவனிடத்துப் பெற்ற கந்தழியாகிய செல்வத்தை யாண்டுந் திரிந்து பெறாதார்க்கு இன்னவிடத்தே சென்றாற்பெறலாமென்று அறிவுறுத்தி, அவரும் ஆண்டுச் சென்று, அக் கந்தழியினைப் பெறும்படி சொன்ன கூறுபாடும் என இதனையும், பக்கமும் என்றதனால் அடக்கிக் கூறுவர் நச்சினார்க்கினியர். - 42. புகழ்ந்தனர் பரவல் ... - இன்னதொன் றெய்துதும் இருநிலத்தியாமெனத் துன்னருங் கடவுள் தொடுகழல் தொழுதன்று. பெரிய பூமியிடத்து, யாம் இன்னதொரு பதத்தினை அடைவோம் என்று, கிட்டுதற்கரிய கடவுளின் கட்டும் வீரக் கழலினையுடைய பாதங்களைப் பணிந்தது, புகழ்ந்தனர் பரவல் ஆகும். . . . சூடிய வான்பிறையோய் சூழ்கடலை நீற்றரங்கத் ஆடி அசையா அடியிரண்டும்-பாடி . . உரவுநீர் ஞாலத்து உயப்போக வென்று - . பரவுதும் பல்காற் பணிந்து. . . 231 சடாமுடியிலே இளம்பிறையினைச் சூடியுள்ளோய் பேய்கள் சூழ்ந்திருக்கும் சுடலையாகிய சாம்பல் அரங்கத்திலே இடையறாது ஆடியிருந்தும் வருத்தமுறாத நின் திருவடிகள் இரண்டையும், உலாவும் கடல்சூழ்ந்த பூமியினின்றும் பிழைத்து நன்னெறியினிடத்தே போவோமென்று பலகாலும் தொழுது பாடி, யாம் போற்றுவோம். - - . . ஞாலத்து உயப்போக என்றது, உலகத்து மீளவும் பிறவிப் பிணியிற் சிக்குண்டு துயருறாமற் பிழைத்துப்போக என்பதாம். பரவுதும் பணிந்து' என்றலால், நின் அருளினைத் தருக" என வேண்டுதலும் ஆயிற்று. - . 43. பழிச்சினர் பணிதல் வயங்கியபுகழ் வானவனைப் பயன்கருதிப் பழிச்சினர்ப்பணிந்தன்று. விளங்கிய புகழினை உடைய இறைவனைப், பெறுதற்குரிய பயனைக்கருதிவாழ்த்தினராகப் பணிந்தது,பழிச்சினர்ப்பணிதல் ஆகும். . . . * - - . ஞாலத்து உயப்போகப் பரவுதல் மேற் கூறினார்; பயன் கருதிப் பழிச்சுதல் இங்குக் கூறுகின்றார். பயனாவது, பிறவி எடுத்ததன் பயன். . . - - - -