பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Helgië Gastød « Gurgestub ul-evi: 203 போந்தை சூடியது புகழ்தலாகிய போந்தை வேம்பு சூடியது புகழ்தலாகிய வேம்பு:ஆத்திமாலையைச் சூடுதலாகிய ஆர் உன்ன மரத்தது நிலைகண்டு நிமித்தம் காணலாகிய உன்ன நிலை; ஆட்டுக்கிடாய் ஊர்கின்ற பருவத்தது சிறப்பைக் கூறலாகிய ஏழகநிலை; இளமை நோக்காது அரசுபூணலாகிய ஏழகநிலை; வளமிக்கவன் கழல் கட்டியது கூறுதலாகிய கழல்நிலை; களத்தே பட்ட மறவனுக்குக் கல்லினைத் தெரிதலாகிய கற்காண்டல், அதனைக் கைக்கொள்ளலாகிய கற்கோள் நிலை; அதனை மாலையிட்டு நீராட்டலும், நடுதற்கான இடத்திலே கொண்டு நிறுத்தலுமாகிய கல்நீர்ப்படுத்தல்; பெயர்பொறித்துக் கல்லினை நடுதலாகிய கல்நடுதல்; நடுகல்லை வாழ்த்துதலாகிய கல்முறை பழிச்சல் கோயில் எடுப்பித்து வாழ்த்தி வழிபடலாகிய, இற்கொண்டு புகுதல் என்பவையாம். - "கற்காணச் சேறலும், இடைப்புலத்துச் சொல்லுவனவும், கண்டுழி இரங்குவனவும், கையறுநிலையும், பாணர் கூத்தர் முதலியோர்க்கு உரைப்பனவும், அவர் தமக்கு உரைப்பனவும் போல்வன, கற்காண்டலின் பகுதியாய் அடங்கும். கால்கொள்ளுங் காலத்து, மாலையும் மலரும் மதுவும் சாந்தும் முதலியன கொடுத்தலும், அனையோற்கு இனைய கல் தருமென்றலும், தமர்பரிந் திரங்கலும், முதலியன கால்கோளின் பகுதியாய் அடங்கும். • . - - நீர்ப்படுக்குங்கால் ஈர்த்துக்கொண்டு ஒழுக்கலும் ஏற்றிய சகடத்தினின்று இழிந்தவழி ஆர்த்தலும், அவர் தாயங் கூறலும் முதலியன, நீர்ப்படையாய் அடங்கும். . . . . . . . நடுதற்கண், மடையும் மலரும் மதுவும் முதலியன - கொடுத்துப் பீலித்தொடையலும் மாலையும் நாற்றிப், பல்லியம் இயம்ப விழவுச் செய்யுஞ் சிறப்பெல்லாம் நடுதலாய் அடங்கும்" பெயரும் பீடும் எழுதுங்காலும் இப்பகுதிகள் கொள்க’ "நாட்டப்படும் கல்லிற்குக் கோயிலும் மதிலும் வாயிலும் ஏனைச் சிறப்புகளும் படைத்தல் பெரும்படைப் பகுதியாய் அடங்கும். "வாழ்த்தற்கண்ணும், இதுதான் நெடிது வாழ்கவெனவும், இதன்கண்ணே அவன் நின்று நிலாவுக வெனவும், பிறவுங் கூறுவனவும் எல்லாம், வாழ்த்துதலாய் அடங்கும்; ஏனையவற்றிற்கும் இவ்வாறே துறைப்பகுதி கூறிக்கொள்க’ - நச்சினார்க்கினியரது இந்த விளக்கத்தையும் இங்கே நாம் அறிதல் வேண்டும்-(புறத். சூ. 5. உரை) - •