பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் மகனைக் கூடும் கூட்டம் ஒன்றானும்; இனி, அவன், பிறர் சிறப்பு மாய்தற்குக் காரணமாகிய பெருஞ்சிறப்பொடு களப்பட்டுத் துறக்கத்துப் போயவழி, அவனோடு இறந்துபட வரும் தாயது தலைப்பெயல் நிலைமை யொன்றானும் என உரைவகுப்பர் நச்சினார்க்கினியர். இவற்றையும் நினைவிற் கொள்க. 20. பூசன் மயக்கு-1 பல்லிதழ் மழைக்கண் பாலகன் மாய்ந்தெனப் புல்லிய பெருங்கிளைப் பூசல்கூறின்று. பலவாகிய இதழ்களையுடைய தாமரைப் பூவைப் போன்று விளங்கும், குளிர்ச்சியான கண்களையுடைய பாலகன் மாய்ந்தான் என்பதனால், பொருந்திய,பெரிய சுற்றத்தினது ஆரவாரத்தினைச் சொல்லியது, பூசன் மயக்கு ஆகும். அலர்முலை அஞ்சொல் அவனொழிய அவ்விற் குலமுதலைக் கொண்டொளித்தல் அன்றி-நிலமுறப் புல்லிய பல்கிளைப் பூசல் பரியுமோ கொல்லிய வந்தொழியாக் கூற்று. 259 கொல்வான் வேண்டி வந்து, தன் செயலிலே தவிராத தன்மையுடைய கூற்றமானது, பணைத்த முலையினையும், அழகிய செயூல்லினையுமுடைய தலைவி அவ்விடத்தே ஒழிய, அந்த வீட்டினது குலமுதலாகிய பிள்ளையைக் கைப்பற்றிக் கொண்டு மறைத்தலல்லது, நிலத்திலே மிகப் பொருந்திய பலவாகிய சுற்றத்தின் ஆரவாரத்திற்கு இரக்கமுற்று, அவனைப் பற்றாதுவிட்டுப போய்விடுமோ? குலமுதல்வனான புதல்வன் இறந்தது குறித்துச் சுற்றம் அரற்றுவதனைக் குறிப்பிடுகின்றது இது. பேரிசை மாய்ந்த மகனைச் சுற்றிய சுற்றம் ஆய்ந்த பூசன் மயக்கத் தானும் என்னும்: தொல்காப்பிய விதியும் (புறத். சூ. 24), அதற்கு நச்சினார்க்கினியர் வகுத்துள்ள உரையும், இதனினும் வேறான கருத்தினைக் கூறுகின்றன. - - பெரும்புகழுடையவனாகி மாய்ந்தான் ஒருவனைச் சுற்றிய பெண்கிளைச் சுற்றம் குரல் குறைவுபட்ட கூப்பிட்டு மயக்கம்’ எனவும், சுற்றம் மாய்ந்த மயக்கம் என்பது பாடமாயின், சுற்றம் ஒருங்கே மாய்ந்தவழிப், பிறர் அழுத பூசன் மயக்கம் என்று கொள்ளினும் அமையும் எனவும் கூறுவார் அவர். 21. பூசன் மயக்கு-2 வேந்தன் மாய்ந்தென வியலிடம் புலம்பினும் ஆய்ந்த புலவர் அதுவென மொழிப.