பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் 26. ஆனந்தம்-2 தவப் பெரிய வெஞ்சமங் குறுகும் அவற் கிரங்கினும் அத்துறையாகும். மிகப் பெரிய வெவ்விய போரினை மேற்கொண்ட மறவனுக்கு இரக்கமுற்றுக் கூறினாலும், அந்த ஆனந்தத் துறையே ஆகும். - - இவன் இறந்துபடுவானே என இரங்குதலின், இது ஆனந்த மாயிற்று. . இன்னா சொகினம் இசையா விரிச்சியும் அன்னா வலம்வருமென் ஆருயிரும்-என்னாங்கொல் தொக்கார் மறமன்னர் தோலாத் துடிகறங்கப் . புக்கான்விடலையும் போர்க்கு. - 265 அன்னையே! திரண்டு வந்தாரான பகைவேந்தரது வெல்லும் துடிப்பறையும் ஒலி முழங்க, நம் தலைவனும் அவரொடு போரிடற்குக் களத்திடத்தே புகுந்தான்; நிமித்தமும் இன்னதாயுள்ளது; நற்சொல்லும் பொருந்துவனவாக அல்ல; என்னுடைய அரிய உயிரும் சுழலா நின்றது; இதுதான், இனி என்னவாகுமோ? - . 27. ஆனந்தப்பையுள் விழுமங் கூர வேய்த்தோள் அரிவை கொழுநன் வியக் குழைந்துயங்கின்று. மூங்கிலைப் போன்ற தோளினை உடையாள், தன்னுடைய கணவன் இறந்துபட, அதனால் இடும்பை மிகுந்தாளாகி மெலிந்து வருந்தியது, ஆனந்தப் பையுள் ஆகும். - - புகழொழிய வையகத்துப் பூங்கழற் காளை திகழொளிய மாவிசும்பு சேர-இகழ்வார்முன் கண்டே கழிகாதல் இல்லையாற் கைசோர்ந்தும் உண்டே அளித்தென் உயிர். 266 பொலிந்த வீரக்கழலினையுடைய தலைவன், தன்னுடைய புகழானது இந்த உலகத்திலே நிற்கவும், தன்னுடைய உயிர் ஒளிதிகழும் பெரிய வானுலகத்தைச் சேர்ந்த தன்மையன் ஆயினான்; அவனுடன் போகாத என்னை இகழ்கின்றாரை எதிரே கண்டும், அவன் பிரிவாலே செயலற்று நின்றும், உடனே அவனுடன் சென்றுவிடும் பெரிதான காதல் என்பது என்னிடத்தே இல்லையாயிற்றே என் உயிர் இன்னமும் உளதாயிருக்கிறதே! அது இரங்கத்தக்கது! - .