பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விக்_ட இங்ங்ணம் கூறி வருந்துவாள், அடுத்து இறந்து படுதலையும் செய்வாளாகவே, இது ஆனந்தப்பையுள்ஆயிற்று. - 28. கையறு நிலை-1 செய்கழன் மன்னன் மாய்ந்தெனச் சேர்ந்தோர் கையற வுரைத்துக் கைசோர்ந்தன்று. . . . . - செய்வினையினாலே சிறப்புற்ற கழலினை அணிந்தோனான மன்னன், போரிடையே இறந்தான் என, அவனைச் சேர்ந்தோர், தம்முடைய கையறவினை உரைத்துச் செயலற்று நிற்பது, கையறு நிலை ஆகும். - - கையறு நிலை என்பது கழிந்தோர் தேஎத்து அழிபடர் உlஇ, ஒழிந்தோர் புலம்பியது என்பர் தொல்காப்பியர் (புறத் சூ, 24). கணவனொடு மனைவியர் கழிந்துழி, அவர்கட்பட்ட அழிவு பொருளெல்லாம் பிறருக்கு அறிவுறுத்தித் தாம் இறந்து படாது ஒழிந்து, ஆயத்தாரும், பரிசில் பெறும் விறலியரும் தனிப்படர் உழந்த செயலறுநிலைமை என்பர் நச்சினார்க்கினியர். தாயன்னான் தார்விலங்கி வீழத் தளர்வொடு நீயென்னாய் நின்றாயென் நெஞ்சளியை-ஈயென்றார்க்கு இல்லென்றல் தேற்றா இகல்வெய்யோன் விண்படரப் - புல்லென்ற நாப்புலவர் போன்று. - 267 என்னுடைய நெஞ்சமே அனைத்துயிருக்கும் தாயைப் போன்று அருள்சுரந்து நின்றவன், பகைவரது முன்னணிப் படையினைத் தடுத்து அப்போரிலே வீழ்ந்து படத் தளர்வுடனே நீ என்னவாகி நின்றனையோ? இது தருக என்று இரந்தார்க்கு, இல்லை என்று உரைத்தலையே அறியாதவனும், போரினை விரும்புவோனுமான நம் தலைவன், வானகம் செல்லப், பொலிவழிந்து போயின செவ்விய நாவினைக் கொண்ட புலவர்களைப் போன்று, நீயும் அளியினை உடையை காண்! - அளியை-என்றது, இரங்குதற்கு உரியை என்பதாம்.அரசனின் சுற்றத்தாரது கையறுநிலை இது 29. கையறு நிலை-2 கழிந்தோன் தன்புகழ் காதலித் துரைப்பினும் மொழிந்தனர் புலவர் அத்துறை என்ன. - இறந்தோனது புகழினை அன்புற்று எடுத்துச்சொன்னாலும், அது கையறுநிலைத் துறையாகும் என்று, அறிவுடையோர் சொல்லுவர். - -