பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் ஊதை உள ஒசிந்து மணங்கமழும் கோதைபோன் முல்லைக் கொடிமருங்குற்-பேதை இவைஇயிணைந்த குவிமுலை யாகம் கவைஇக் கவலையிலம். - 275 காற்று அசைத்தலானே வணங்கி மணங் கமழுகின்ற மாலையினை யொத்த, முல்லைக் கொடியினைப் போன்ற இடையினையுடைய மடவாளது, தம்மில் இணையொத்துக் குவிந்த முலைகளையுடைய மார்பைத் தழுவிக்கொண்டு, யாம் கவலையில்லேம் ஆயினேம். o 'ஆகம் கவைஇக் கவலை இலேம்' எனத் தழுவலது இயல்பினை மிகுத்துக் கூறுதலால், இது முல்லை ஆயிற்று. 37. கார் முல்லை - அருந்திறற் கட்டுரவர்வாராமுன் கருங்கடன் முகந்து கார்வந்தன்று. - பெறுதற்கரிய - வலியினையுடைய பாசறையினின்றும் தலைவர் வந்து சேருதற்கு முன்பாகவே, மேகம், கருங் கடலின் நீரை முகந்துகொண்டு வந்தது என்பது, கார்முல்லை ஆகும். புனையும் பொலம்படைப் பொங்குளைமான் திண்தேர் துணையும் துனைபடைத் துன்னார் - முனையுள் அடல்முகந்த தானை யவர்வாரா முன்னம் கடல்முகந்து வந்தன்று கார். - . 276 பூணும் பொற்படையாகிய மேலீட்டையும், எழுந்தசையும் தலையாட்டத்தையும் உடைய குதிரைகள் பூட்டப் பெற்ற திண்மையான தேர், கடிய செலவினைக் கொண்ட படையினையுடைய பகைவரது போரிடத்தே, கொலைத் தொழிலை ஏற்றுக் கொண்ட தானையினையுடைய தலைவர் இங்குவருதற்கு முன்பாகவே,மேகம்,கடல்நீரை முகந்துகொண்டு இங்கே வந்தது. - ‘. . இது தலைவியது கூற்று. கார் வரவினது இயல்பிை மிகுத்துக் கூறுதலால் கார் முல்லை ஆயிற்று. - - 38. தேர் முல்லை உருத்தெழு மன்னர் ஒன்னார் தந்நிலை திருத்திய காதலர் தேர்வர வுரைத்தன்று. சினங்கொண்டு போரிடற்கு எழுந்த மன்னர்களாகிய பகைவரது அந்தத் தன்மையினைத், தம் ஆற்றலானே அவரை வென்று திருத்தியமைத்த, காதலரது தேர்வரவினைச்சொல்லியது, தேர் முல்லை ஆகும். -