பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- புலியூர்க்கேசிகன்- பொதுவியம் படலம் 225 வலிய மலைபோன்ற மார்பகத்தை உடையவனான எம் காதலன் அருள,யான் வருகிற விருந்தினரைப் போற்றுகின்ற இந்த வளமானது, நெடுங்காலந்தோறும் நெடுங்காலந் தோறும் வணங்கப்பட்டுக் கெடுதலின்றிக், கடல் சூழ்ந்த இவ்வுலகிடத்தே பெருக வாழ்வதாக! - 'ஊழிதோறுழி’ எனவே, தொடர்ந்து அவனையே கணவனாக அடைதலையும், அவன் வீட்டது வளம் பெருகுதலையும் நினைந்தனள்; இதனால், அவளது கற்புத் தன்மையின் மிகுதியும் அறியப்படும். தொகுத்து உரைத்தல் பொதுவியலுள், முல்லைப் பொதுவியற்பாலனவாகிய ஒழுக்கம், எட்டு வகைத் துறைகளான் அமையும். அவை தலைவன் தலைவியொடு கூடிய மகிழ்ச்சியது மிகுதியினை உரைத்தலாகிய முல்லையும்; தலைவன் வினைமுற்றி மீண்டு வாராமுன்வந்து தோன்றிய காரினது மிகுதியைக் கூறலாகிய கார் முல்லையும்; வினை முடித்து வரும் தலைவனது தேரது மிகுதியைக் கூறலாகிய தேர்முல்லையும்; - நாணே காவலாகப் பிரிவிடை இருந்தாளது சிறப்பை மிகுத்துக் கூறலாகிய நாண்முல்லையும்; இல்லாளது தன்மை மிகுதியை உரைத்தலாகிய இல்லாண் முல்லையும்; மனைவி, தன் கணவனை உழவெருதோடு ஒப்பிட்டுக் கூறுதலாகிய பகட்டு முல்லையும். - - கணவன், மனைவியை அடையத் தந்த ஊழினை வாழ்த்தலாகிய பான்மிகுதியும்; கணவனின் நன்மையை மனைவி பாராட்டலும், தனக்குத் தானே நிறைபூண்டிருக்கும் மனைவியது காவல் மிகுதியை உரைத்தலும், கணவனது வளமனைச் செல்வத்தை மனைவி வாழ்த்தலும் ஆகிய கற்பு முல்லையும் ஆம் xxxxxx