பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் அருமையுடைத்தாதலின் மிகவும் புகழ்ந்தது, நயப்புற்று இரங்கல் ஆகும். - கூட்டத்தை நயந்து, அது பெறுதற்கு அருமையாயினதால் இரங்கியது இதுவாகும். - பெருமட நோக்கிற் சிறுநுதற் செவ்வாய்க் கருமழைக்கண் வெண்முறுவல் பேதை-திருமுலை புல்லும் பொறியிலேனுழை நில்லாதோடுமென் நிறையில் நெஞ்சே, 291 - என்னுடைய நிறையில்லாத நெஞ்சமானது, மிகுதியான மடப்பத்தாற் சிறந்த பார்வையினையும், சிறுத்த நுதலினையும், சிவந்த வாயினையும், கரிய மழைபோலக் குளிர்ந்த கண்களையும், வெள்ளிய முறுவலையும் உடைய மடவாளது, அழகிய முலைகளைத் தழுவும் விதியில்லாதேனிடத்தே இருக்கத்தரியாது, ஓடா நின்றதே! - ஒடுதல் அவளிடத்தே என்க. 8. புணரா இரக்கம் உணரா எவ்வம் பெருக ஒளியிழைப் புணரா இரக்கமொடு புலம்புதர வைகின்று. பிறர் அறியாத துக்கமானது தன்பாற் பெருகுதலானே, சுடர்விடும் ஆபரணத்தை Զ 6Ծ) Լ Ա / fT 6Ծ) 6ՈT மணவாத துன்பத்தோடே தனிமையுறத் தங்கியது, புணரா இரக்கம் ஆகும். இணரார் நறுங்கோதை எல்வளையாள் கூட்டம் புணராமற் பூசல் தரவும்-உணராது தண்டா விழுப்படர் நலியவும் உண்டால் என்னுயிர் ஒம்புதற் கரிதே. 292 கொத்து நிறைந்த நறிய மாலையினையும், ஒளியிலங்கும் வளைகளையும் உடையாளது புணர்ச்சியினைப் பெறாமையி னாலே, பிறர் இகழும் ஆரவாரம் உண்டாகவும் அறியாது கெடாத சீர்மையினையுடைய நினைவு வருத்தவும் என்னுடைய உயிரானது சிறிதே உளதாயிருக்கின்றது; இனியும், இதனைப் பாதுகாத்தற்கு என்னால் அரிதாகும். - இனியும் அவள் இணங்காளாயின், என்னுயிர் என்னை விட்டுப் போய்விடும் எனப் புலம்பியது இது. + 9. வெளிப்பட இரத்தல் அந்தழை அல்குல் அணிநலம் புணரா - வெந்துயர் பெருக வெளிப்பட இரந்தன்று.