பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் 2. பெண் பாற் கூற்று (கைக்கிளைப் படலத்தின் பெண்பாற் கூற்று நிகழும் முறைமையினை உரைப்பது இந்தப் பகுதி. தன் பால் காதல் கொள்ளுதல் இல்லாதான் ஒரு தலைவனைத் தலைவி ஒருத்தி, தான்காமுற்றுக் கூடுதலை விரும்பியவளாகக் கூறுதல் இதுவாகும்) காண்டல் நயத்தல் உட்கொள் மெலிதல் மெலிவொடு வைகல் காண்டல் வலித்தல் பகன்முனிவுரைத்தல் இரவுநீடு பருவரல் கனவின் அரற்றல் நெஞ்சொடு மெலிதல் பெண்பாற் கூற்றுக் கைக்கிளை யாகும். (15) காண்டல், நயத்தல், உட்கோள், மெலிதல், மெலிவொடு வைகல், காண்டல் வலித்தல், பகல் முனிவுரைத்தல், இரவு நீடு பருவரல், கனவின் அரற்றல், நெஞ்சொடு மெலிதல் என்னும் பத்தும் பெண்பாற் கூற்றுக் கைக்கிளை ஆகும். - அவற்றுள்: 10. காண்டல் தேம்பாய் தெரியல் விடலையைத் திருநுதல் காம்பேர் தோளி கண்டுசோர்ந்தன்று. மதுப் பொழியும் மாலையினையுடைய ஒரு தலைவனை, அழகிய நுதலினையும் மூங்கிலையொத்த தோள்களையும் உடையாள் ஒரு தலைவிநோக்கி, அவன்பாற் காமுற்றது காண்டல் ஆகும். - கடைநின்று காமம் நலியக் கலங்கி இடைநின்ற ஊரலர் தூற்றப்-புடைநின்ற எற்கண் டிலனந் நெடுந்தகை தற்கண்ட னென்யான் கண்டவாறே. 294 அந்தப் பெரிய மேம்பாட்டினையுடைய தலைவன், என்னிடத்தே ஆசையானது நிலைபெற்று வருத்தவும், அதனாற் கலங்கி நடுகின்ற ஊரவர் அலர் தூற்றவும், தன் பக்கத்திலேயே நின்ற என்னைத் தான் கண்டான் அல்லன், யானே அவனைக் கண்டேன்; யான் கண்டபடியும் இவ்வாறேயாம். அவனை யான் கண்டு ஆசையுற்றதன்றி, அவன் என்னைக் கண்டிலன் என்றனள். கடை-இடம், புடை-பக்கம். 11. நயத்தல் கன்னவில் திணிதோட் காளையைக் கண்ட நன்னுதல் அரிவை நயப்புரைத் தன்று. கல்லினை ஒப்பாகக் கூறுதற்குரிய திண்மையான தோள்களை உடையவனான, காளைபோல்வானைக் கண்ட நல்ல நுதலினை