பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் 2. பின்னிலை முயறல் முன்னிழந்த நலன்நசைஇப் பின்னிலை மலைந்தன்று. தலைவி தான் முன்பு இழந்துபோன தன்னுடைய அழகினை மீளவும் பெறுதலை விரும்பித், தலைவனுக்குப் பின்னாக இரந்து நிற்றலை மேற்கொண்டது, பின்னிலை முயறல் ஆகும். மற்கொண்ட திண்டோள் மறவேல் நெடுந்தகை தற்கண்டு மாமைத்தகையிழந்த-எற்காணப் பெய்களி யானைப் பிணரெருத்திற் கண்டுயான் கைதொழுதேன் தான்கண்டிலன். 307 மல்லங்ாடுதலை மேற்கொண்ட திண்ணிய தோள்களையும், மறத்தன்மை பொருந்திய வேற்படையினையும் கொண்டவனான, பெரிய மேம்பாட்டினை உடையவனைக் கண்டு, மாமை நிறத்தின் தகையினை இழந்து நின்ற என்னை அவன் காணும்படியாக, பொழியும் மதத்தினையுடைய களிற்றினது சருச்சரையாற் பொலிந்த கழுத்தகத்தே கண்டபோது, யானும் கைதொழுது நின்றேன்; அவனோ என்னைத்தான் கண்டான் அல்லன். மாமை-பொன்னிறம், மாந்தளிரது வண்ணமும் ஆம். எருத்து - கழுத்து. பிணர் - சருச்சரை. 3. பிரிவிடை ஆற்றல் இறைவளை நெகிழ இன்னா திரங்கிப் பிறைநுதன் மடந்தை பிரிவிடை ஆற்றின்று. இளம்பிறையினைப் போன்ற வடிவினைக் கொண்ட நெற்றியினையுடைய மடவாள், தலைவன் பிரிந்த விடத்துத் தன் முன் கையிடத்து வளைகள் கழன்று வீழத், தன்னை வெறுத்து வருந்தியவளாக ஆற்றியிருந்தது, பிரிவிடை ஆற்றல் ஆகும். ஒடுக கோல்வளையும் ஊரும் அலர்அறைக தோடவிழ் தாழை துறைகமழக்-கோடுடையும் பூங்கானற் சேர்ப்பன் புலம்புகொள் மான்மாலை நீங்கானென் நெஞ்சகத்துள் நின்று. - 3O8 இதழ் விரியும் தாழை, நீர்த்துறையெல்லாம் மணம் நாறாச் சங்குபோல மலர்கின்ற, பொலிந்த கடற்கானலை உடையவன் என் சேர்ப்பன்; அவன், தனிமை கொண்ட மயக்கத்தை உடையதான இந்த மாலைக் காலத்தும், என் நெஞ்சிடத்தே நிலைபெற்று, அதனின்றும் போகாதவனாக இருப்பான்; அதனால், திரண்ட