பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 246 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் இறையே இறந்தன எல்வளை உண்கண் உறையே பொழிதலும் ஒவா - நிறையைப் பருகாப் பகல்சுரந்த பையுள்கூர் மாலை உருகா உயங்கும் உயிர். 314 என் நிறையினைக் குடித்துக் கதிரவன் ஒளித்த, நோய் மிகும் மாலைக் காலத்திலே, என் ஒளிவளைகள் முன் கையினின்றும் கழன்றுபோயின; மையுண்ணும் கண்களும் துளியைச்சொரிதலை ஒழியாவாயின; என் உயிரோ உருகுதலுற்று வருந்தா நிற்கும். (யான் என் செய்வேனோ?) மாலைப் பொழுது கண்டு, தலைவி, தன்னுடைய பொறுக்கலாற்றாத் தனிமைத் துயிரினை நினைந்து, இரங்கிப் புலம்பியது இதுவாம். 10. பரத்தையை ஏசல் அணிவயல் ஊரனோடப்புவிழ வமரும் பணிமொழி யரிவை பரத்தையை ஏசின்று. அழகிய வயல்களையுடைய ஊரனுடனே, நீர்விளை யாட்டினை விரும்பும், மெல்லிய சொல்லினை யுடைய தலைவியானவள், பரத்தையை ஏசியது, பரத்தையை ஏசல் ஆகும். அமர்தல்-விரும்புதல். யாமுயங்கு மென்முலையால் யாணர் வயலூரன் தேமுயங்கு பைந்தார் திரைமுயங்க-யாமுயங்க எவ்வையர் சேரி யிரவும் இமைபொருந்தாக் கவ்வை கருதிற் கடை. ... - 315 யாம் பொறுத்தற்கு ஆற்றாது வருந்தும் எம்முடைய மென்மையான முலைகளாலே, புதுவளப்பத்தையுடைய கழனியால் நிறைந்த ஊரனது, தேன் தழுவும் பசிய மாலையினை, நீரலைகள் தழுவா நிற்பவும், அதனோடே யாமும் தழுவுதற்கு விரும்புவோம்;எம் தங்கையரான பரத்தையரது சேரியானது இரவு முழுதும் கண்ணிமை பொருந்தாத ஆரவாரத்தை உடையதாயிருந்ததனை நினைந்தால், அது பெரிதும் கடையான செயலாம். - நீர் விளையாட்டை விரும்பிய தலைவி, அதற்கு வாய்ப்பின்றித் தலைவனைத் தம்பாற் கொண்டிருந்த பரத்தையரைக் குறித்து ஏசியது இதுவாம்.