பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன்-பெருந்திணைப்படலம் 253 விளம்பல், பரத்தை வாயில் பாங்கி கண்டுஉரைத்தல் பிறர் மனைத் துயின்றமை விறலி கூறல், குற்றிசை, குறுங்கலி என்னும் பதினேழும் பெருந்திணைப்பாற்பட்டன ஆகும். அவற்றுள்: 20. செலவழுங்கல் நிலவுவேல் நெடுந்தகை நீள்கழை ஆற்றிடைச் செலவுமுன் வலித்துச் செலவழுங்கின்று. நிலவினைப் போல ஒளிசிதறும் வேலினையும், பெரிய மேம்பாட்டினையும் உடைய தலைவன், நீண்ட மூங்கில் பொருந்தின நெறியினிடத்தே செல்லுதலை முன்னே துணிந்து, பின்னர் அதனைத் தவிர்ந்தது. செலவழுங்கல் ஆகும். நடுங்கி நறுநுதலாள் நன்னலம்பீர் பூப்ப ஒடுங்கி உயங்கல் ஒழியக்-கடுங்கணை வில்லேர் உழவர் விடரோங்கு மாமலைச் செல்லேம் ஒழிக செலவு. 325 நெஞ்சே! நறிய நுதலினை உடையாளது நல்ல அழகெல்லாம் பீர்க்கம் பூவினது நிறத்தினைப்போலப் பசலை பூக்க, அவள் நடுங்கி ஒடுங்கி வருந்துதல் நீங்குமாறு, யாம், கடிய அம்பினையுடைய வில்லினை ஏராகக் கொண்டிருக்கும் வேடர்களது முழைகள் உயர்ந்த, பெரிய மலைபொருந்திய வழியூடே போகேம்; அதனால், நின் செலவு விருப்பத்தினைக் கைவிடுவாயாக!” - நறுநுதலாள் உயங்கல் ஒழிய என்றது, செல்லாமைக்குக் காரணம் இதுவெனக் கூறியது. விடர்-மலைப் பிளப்பு. - 21. மடலூர்தல் ஒன்றல்ல பலபாடி மன்றிடைமடலூர்ந்தன்று. ஒன்றன்றியே பலவற்றையும் பாடியபடி, ஊர்மன்றினிடத்தே தலைவன் மடன்மாவைச் செலுத்தியது, மடலூர்தல் ஆகும். இன்றிப்படரோ டியானுழப்ப ஐங்கணையான் வென்றிப் பதாகை எடுத்தானாம் - மன்றில் தனிமடமான் நோக்கித் தகைநலம் பாராட்டிக் குனிமடல்மாப் பண்ணிமேற்கொண்டு. 326 அம்பல்த்தே, ஒப்பற்ற மடப்பத்தையுடையவளும் மான் போன்ற பார்வையினைக் கொண்டவளுமான தலைவியது