பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் பகைவர் மேற் சிவந்த கண்களை உடையவரான மறவரது சினமெல்லாம், இளி என்னும் இசையினது இனிமையைக் கொண்ட இனிய சொல்லினை யுடையவளும், இளமையும் பெருமையும் உடையவளுமான் எயிற்றியினது, காமக்களிப்பினை உட்கொண்ட பார்வையானது வருத்தவும், தெளிவு கொண்ட வெவ்விய கள்ளானது மிகுதியாகவும், கெடுவதாகும் போலும்! இந்த உண்டாட்டு நிகழ்ச்சியின் நடைமுறையினை நறவும் தொடுமின் என்னும் புறநானூற்றுப்பாட்டு(262) நன்கு எடுத்துக் கூறும் கவற்றவருத்த விளிவது.கெடுவது தம் போர்வெம்மை யினை மறந்து உண்டாட்டு அயர்பவரைக் கண்டோர், வியந்து இவ்வாறு உரைத்தனர். - 14. கொடை ஈண்டிய நிரை ஒழிவின்றி. வேண்டியோர்க்கு விரும்பி வீசின்று. தம்முடைய பகுதியாகத் திரண்டுள்ள ஆநிரையை, ஒன்றும் தப்பாதபடியாகத், தம்மை வந்து வேண்டி நின்றோருக்குத், தலைவர்கள் விருப்பத்துடன் கொடுப்பது கொடை ஆகும். 'ஒழிவின்றி என்றது, ஒன்றையும் தமக்கென வைத்துக் கொள்ளாதபடி என்பதாம். வேண்டியோர் - கேட்டு நின்றோர், வீசின்று' என்பது, கொடுத்தலின் அளவுகடந்த பெருக்கத்தைக் குறித்துச் சொல்லப்பட்டதாம். " . - அங்கட் கிணையன் துடியன் விறலிபாண் வெங்கட்கு வீசும் விலையாகும்- செங்கட் செருச்சிலையா மன்னர் செருமுனையிற் சீறி வரிச்சிலையால் தந்த வளம். - - 16 சிவந்த கண்ணினராகப் போர்க்குப் பின்னிடாத மன்னர், போர் முனையிலே சீற்றங்கொண்டு, வரிதலையுடைய வில்லினது ஆண்மையாலே கொணர்ந்த ஆநிரையாகிய வளமெல்லாம், அழகிய கண்ணாற் சிறந்த கிணைப்பறையினை உடையவனும், துடிப்பறையினைக் கொட்டுபவனும், விறலியும், பாண்மகனும், தாம் உண்ட வெவ்விய கள்ளுக்கு வீசியெறியும் விலையாக அமையும். . . . . வெங்கட்கு வீசும் விலையாகும் வளம் ೯rpಖ7ು, அவர் கொடையாகப் பெற்ற நிரையினது பெருக்கம் காட்டப்பெற்றது.