பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்- கரந்தைப்படலம் 29 வெங்குருதி மல்க விழுப்புண் உகுதொறுஉம் இங்குலிகம் சோரும் வரையேய்க்கும் - பைங்கண் இனம்போக்கி நின்றார் இகல்வாட்டி வேந்தன் மனம்போல வந்த மகன். - 26 - பசிய கண்களையுடைய ஆணினத்தை முன்னே செலுத்தியவ ராக நின்ற, வெட்சியாரது மாறுபாட்டினைத், தன்னுடைய வேந்தனது மனவிருப்பிற்கு ஏற்பக் கெடுத்து, அவரை வெற்றி கொண்டு, தன்னுர்க்கு மீண்டுவந்தோனாகிய வீரமறவனானவன், முகத்தினும் மார்பினும் பெற்ற விழுப்புண்களினின்றும் வெவ்விய குருதியானது மிகுதியாகச் சொரிந்து கொண்டிருக்க விளங்கிய தன்மை, சிவந்த சாதிலிங்கக் குழம்பினைச் சொரிந்திருக்கின்ற மலையினைப் போன்றதாக இருக்கும்! இங்குலிகம்-சாதிலிங்கம்; இதன் நிறம் குருதிச் சிவப்பு. வேந்தன் மனம் போல’ என்றது, வெற்றியை எதிர்பார்த்திருக்கின்ற மனநிலையினை. 5. போர்க்களத்து ஒழிதல் படைக்கோடா விறன் மறவரைக் கடைக் கொண்டு களத்தொழிந்தன்று. பகைவரின் படைஎழுச்சிக்கு எதிராகப் புறங்காட்டி ஒடுதலில்லாத, வெற்றிச் சிறப்பினையுடைய மறவர்களை, இறுதிவரைக்கும் எதிர்நின்று அழித்துக் கரந்தை மறவன், தானும் போர்க்களத்திடையே அழிவினை அடைவது, போர்க்களத்து ஒழிதல் ஆகும். 'களத்து ஒழிதல் தானும், அவன், படைக்கோடா விறன் மறவரைக் கடைக்கொண்டு வீழ்ந்ததனாற், போற்றற்குரிய செயலாயிற்று. 'படைக் கோடா விறன் மறவர்’ என்பது கரந்தையாரைக் குறிப்பதாயின், படைக்கு எதிரே புறமிட்டு ஓடாத இயல்புடைய வெற்றியாளரான மறவரைக் கூட்டிச் சென்று கரந்தையாடிய தலைவன், தான் போர்க்களத்தே பட்டது என உரைக்கவேண்டும். கடைக்கொண்டு-கூட்டி உரைப்பின் அதுவியப்போ ஒன்னார்கைக் கொண்ட நிரைப்பின் நெடுந்தகை சென்றான் - புரைப்பின்று உளப்பட்ட வாயெல்லாம் ஒள்வாள் கவரக் களப்பட்டான் தோன்றான் கரந்து. 27 பகைவர் கைப்பற்றிப் போன நிரையினது பின்னாக மேம்பாட்டினையுடைய வீரமறவன் சென்றான். ஒப்பிலாதது எனக் கருதப்பட்ட தன் உடலிடமெல்லாம் பகைவரது ஒள்ளிய