பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன்_கரந்தைப்படலம் 31 ஆள் எறி பிள்ளை’. பகையாள்களை வெட்டி வீழ்த்திய விளைவறியாதபிள்ளைமைத்தன்மை.இது, அவனும் பகைவரால் வெட்டி வீழ்த்தப்படுவான் என்பது குறித்துக் கூறப்பட்டது. 7. பிள்ளைத் தெளிவு - கண் மகிழ்ந்து துடிவிம்மப் புண் மகிழ்ந்து புகன்றாடின்று. - - துடியினது கண் மகிழ்வோடும் முழங்காநிற்பத், தன் விழுப்புண்ணினை நோக்கி மகிழ்ந்தானாகக், கரந்தை மறவன் விருப்புடன் கூத்தாடி மகிழ்வது, பிள்ளைத் தெளிவு ஆகும். மேவார் உயிருணங்க மேன்முடித்த பிள்ளையன் பூவாள் உறைகழியாப் போர்க்களத்து - ஒவான் துடியிரட்டி விம்மத் தொடுகழலார் முன்னின்று அடியிரட்டித் திட்டாடும் ஆட்டு. . பகைவரது உயிர் உலரும்படியாக, அவர்தம் தலையினை அறுத்து முண்டமாக்கிய பிள்ளைத் தன்மையினைக் கொண்ட கரந்தை மறவன், போர்க் களத்திடத்தே, பொலிவுடைய தனது வாளினை உறையினின்றும் கழித்தவன், அதனின்றும் நீங்காதே, துடிப்பறையின் ஆர்ப்பொலி மிகத் தொடுத்த வீரக்கழலினை யுடைய ஏனை மறவரினும் முன்னாக நின்றானாக, இட்ட அடியின்மேல் மீண்டும் அடியிட்டவனாக நின்று, அவ்விடத்தே கூத்தும் ஆடினன். . . . . . . - கரந்தை மறவர், வெட்சியாரை வெற்றிகொண்டு நிரை மீட்டுத் தம்முடைய நாடு நோக்கி மீண்டு கொண்டிருக்க, களத்திலே வாளாற்றல் மிகச்செய்த வீரன் ஒருவன், தானும் மீள எண்ணானாகிய தன்மையுடன், அவ்விடத்தேயே நின்று, அடியிரட்டித்து இட்டு வெற்றிக்கூத்தாடி நின்ற நிலையினை வியந்தது இது. தொடுகழலார் முன்’ என்றது, வெற்றி பெற்றவராகிய கரந்தை மறவரின் முன்பாக என்பதாம். போர் முடிந்தும் களத்தினை நீங்க நினையாத அவனது போர்க்குணத்தினை வியந்து உரைப்பதும் இது. மேவார். பொருந்தாதவர்; பகைவர். மேன் முடித்தல் மேற்பகுதியான தலையினை அறுத்தல். ஆடும் ஆட்டு என்பது, அவன் தான் பெற்ற விழுப்புண்ணுக்கு உவந்து ஆடியதாகும். - 8. பிள்ளையாட்டு 29 கூடலர் குடர் மாலை சூட்டி வேல்திரித்து விரும்பி யாடின்று.