பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 - புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் செல்லும்படியாக, அவை பரந்தோடும் நெருப்பினிடத்தே தங்கியவாயின. - பகைவரது வளநாடு மிக்க எரியுள் வைகியது கூறுதலால், இது உழபுல வஞ்சி ஆயிற்று. அயில்வேல் அஞ்சி அலறல்-வஞ்சி மறவரின் போர்க் கடுமையால் விளைந்த அழிபாட்டிற்கும், விளையப்போகும் கொடுமைகட்கும் அஞ்சிக் கதறல். 'மயிலன்னார் மன்றம் படர்தல் உயிர் பிழைத்தற்பொருட்டு. மகளிரைக் கொல்லுதல் மறவரின் இயல்பன்று. 14. மழபுல வஞ்சி கூடார் முனை கொள்ளை சாற்றி - வீடறக் கவர்ந்த வினை மொழிந்தன்று. பகைவரது வேற்றுப் புலத்தினைக் கொள்ளையூட்டி, அவ்விடத்து வீடுகள் அனைத்தும் பாழ்பட்டுப் போமாறு, ஆங்குள்ள செல்வங்களையும் கொள்ளையிட்ட செயலைச் சொல்லுவது, மழபுல வஞ்சி ஆகும். களமர் கதிர்மணி காலேகம் செம்பொன் வளமனை பாழாக வாரிக்-கொளன்மலிந்து கண்ணார் இலையார் கவர்ந்தார் கழல்வேந்தன் நண்ணார் கிளையலற நாடு. 50 கண்ணுக்கு நிறைந்த தோற்றத்தவரான வில்வீரர்கள், வீரக் கழலினையுடைய தம் வேந்தனுக்குப் பகைவராகியோரின் சுற்றத்தார் அலறும்படியாக, அவர் நாட்டினிடத்துள்ள களமர்களையும், ஒளிவிடும் மணிகளையும், முத்துகளையும், செம்பொன்னையும், அவரது வளமனை முற்றவும் பாழாகும் படியாக வாரிக் கொள்ளுதலிலே மிக்கவராகி, அவற்றைக் கைக்கொண்டனர். களமர்-அடியவர். வளமனை பாழாக வாரிக் கவர்ந்தது உரைத்தலால் இது மழபுல வஞ்சி ஆயிற்று. காலேகம் முத்து. பொருள்களொடு சேரக் களமர் என்பாரையும் குறிப்பிடுதலால், அக்காலத்து அடித்தொழில் செய்யும் அடிமையர் கூட்டமும் இருந்தனராதல் வேண்டும்.வளமனை,பகையரசரது அரண்மனை. . கிளை அவரது அரசச் சுற்றம் அவர் அலற என்பதனால், பகைமன்னர் முன்பே போரில் அழிந்தமையும் பெறப்படும். 15. கொடை வஞ்சி நீடவும் குறுகவும் நிவப்பவுந்துக்கிப் பாடிய புலவர்க்குப் பரிசில் நீட்டின்று.